26,Apr 2024 (Fri)
  
CH
ஆரோக்கியம்

கொரோனா தொற்றை எவ்வாறு கண்டுபிடிப்பது

ஒருவருக்கு ஏற்பட்டுள்ளது கொரோனா தொற்றா அல்லது சாதாரண ஜலதோஷமா என்பதை கண்டுபிடிப்பதற்காக எளிய விளக்கப்படம் ஒன்றை அமெரிக்க நோய்த் தடுப்பு மையம் வெளியிட்டுள்ளது.

ஒருவருக்கு காய்ச்சலும், இருமலும் இருந்து மூச்சு விட அவர் கஷ்டப்பட்டால், இவைதான் கொரோனா தொற்று இருப்பதற்கான முக்கிய அறிகுறிகள் என்று கூறுகிறது அந்த விளக்கப்படம்.

அமெரிக்க நோய்த்தடுப்பு மையங்கள் மற்றும் தேசிய சுகாதார நிறுவனத்திலிருந்து பெறப்பட்ட தகவல்களின் அடிப்படையில் உருவாக்கப்பட்டுள்ள அந்த வரைபடம், கொரோனா தொற்று, ப்ளூ, ஜலதோஷம் மற்றும் ஒவ்வாமை (allergy) ஆகியவற்றிற்கான அறிகுறிகளை வெளியிட்டு ஒருவருக்கு என்ன தொற்று ஏற்பட்டிருக்கலாம் என்பதை கண்டுபிடிக்க உதவுகிறது.

அதில் கேட்கப்பட்டிருக்கும் கேள்விகளுக்கு, ஆம், இல்லை என பதிலளிப்பதன் மூலம் ஒருவருக்கு கொரோனா தொற்று உள்ளதா இல்லையா என்பதை அறியலாம்.

உங்களுக்கு காய்ச்சல் உள்ளதா என்பது முதல் கேள்வி.ஆம் என்றால், அது கொரோனாவுக்கான முக்கிய அறிகுறிகளில் ஒன்று. இல்லையென்றால் கொரோனா இருக்க வாய்ப்பு குறைவு.

உங்களுக்கு காய்ச்சல் இருக்கும் பட்சத்தில், அடுத்த கேள்வி, மூச்சு விட சிரமப்படுகிறீர்களா, முழுமையாக மூச்சை இழுத்துவிட முடியவில்லையா என்பது. ஆம் என்றால், உங்களுக்கு கொரோனா இருக்கலாம்.

இல்லையென்றால், உங்களுக்கு ஏற்பட்டிருப்பது ப்ளூவாக இருக்கலாம். கொரோனாவின் மற்ற அறிகுறிகள், இருமல், சோர்வு, பெலவீனமாக உணர்தல் ஆகியவையாகும்.

அதே நேரத்தில் ப்ளூவுக்கான அறிகுறிகளும் இவைதான் என்பதை நினைவில் கொள்ளவேண்டும்.





கொரோனா தொற்றை எவ்வாறு கண்டுபிடிப்பது

0 Comments

    No Comments Here ..

Leave a comment

Post Comment





<

செய்திமடல்

ராசிப்பலன்கள்

கருத்துகணிப்பு