01,May 2024 (Wed)
  
CH
உலக செய்தி

ஊரடங்கு உத்தரவை மீறும் நபர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்

சர்வதேச அளவில் மோசமான பாதிப்புகளை ஏற்படுத்தி வரும் கொரோனா வைரஸிற்கு எதிராக உலக நாடுகள் போராடி வருகின்றன. வைரஸ் பாதிப்பு எந்தளவிற்கு இருக்கிறது என்று தற்போதைய நிலவரம் பற்றி அறிந்து கொள்ளலாம்.

சீனாவின் வுஹான் மாகாணத்தில் தொடங்கி ஏராளமான உலக நாடுகளை கொரோனா வைரஸ் பாதித்துள்ளது. இதற்கான மருந்து கண்டுபிடிக்கும் முயற்சிகள் நடைபெற்று வருகின்றன.

* தமிழ்நாட்டில் உள்ள தனியார் மருத்துவமனைகளில் கொரோனா சிறப்பு வார்டுகள் அமைக்க தமிழ்நாடு அரசு அறிவுறுத்தியுள்ளது.

* நாடு முழுவதும் ரத்து செய்யப்பட்ட 155 ரயில்களில் முன்பதிவு செய்யப்பட்ட டிக்கெட்களுக்கு கட்டணம் ஏதும் பிடிக்கப்படாது என்று ரயில்வே நிர்வாகம் தெரிவித்துள்ளது. 100% பணம் திருப்பி தரப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

* நியூசிலாந்தின் எல்லைகள் அனைத்தும் இன்று நள்ளிரவு முதல் மூடப்படுவதாக அந்நாட்டு பிரதமர் அர்டெர்ன் அறிவித்துள்ளார். இதன்மூலம் வெளிநாட்டவர்கள் உள்ளே செல்ல அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.

* வரும் மார்ச் 31ஆம் தேதி வரை நொய்டாவின் செக்டர் 33ல் உள்ள இஸ்கான் கோவில் கொரோனா வைரஸ் அச்சம் காரணமாக மூடப்பட்டுள்ளது.

* சண்டிகரை சேர்ந்த 23 வயது பெண்ணிற்கு கோவிட்-19 பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இவர் இங்கிலாந்திற்கு பயணம் மேற்கொண்டு திரும்பியது குறிப்பிடத்தக்கது.

தனிமையில் 639 பேர், என்னதான் நடக்கிறது, டெல்லி இளைஞர் கதை என்ன?

* வரும் மார்ச் 31ஆம் தேதி வரை நாடாளுமன்றத்தில் தினசரி செய்தியாளர்கள் சந்திப்பை தவிர்க்க திரிணாமுல் காங்கிரஸ் கட்சி முடிவு செய்துள்ளது. கொரோனா வைரஸ் காரணமாக இப்படியொரு நடவடிக்கையை எடுத்துள்ளதாக கூறப்படுகிறது.

* அமெரிக்கா - கனடா இடையிலான எல்லைப் பகுதி மூடப்பட்டுள்ளது. அமெரிக்காவில் கொரோனா வைரஸ் மேலும் பரவுவதை தடுக்கும் வகையில் இத்தகைய நடவடிக்கை எடுக்கப்பட்டு இருக்கிறது. அமெரிக்காவில் பொதுமக்களுக்கு தேவையான மருத்துவ வசதிகளை செய்து தர அதிபர் ட்ரம்ப் உத்தரவிட்டுள்ளார்.

* சர்வதேச அளவில் பொருளாதாரம் பாதிக்கப்பட்டிருக்கும் நிலையில் இந்தியப் பங்குச்சந்தைகள் இன்று சரிவுடன் வர்த்தகமாகி வருகின்றன. சென்செக்ஸ் 1,700 புள்ளிகள் வீழ்ச்சி அடைந்துள்ளன. நிஃப்டி 8,000 புள்ளிகளுக்கு கீழே சென்றுள்ளது. இதனால் முதலீட்டாளர்கள் மிகுந்த அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

* கொரோனா வைரஸ் அச்சம் காரணமாக மேற்கு ரயில்வேயில் பயணிப்பவர்களின் எண்ணிக்கை 8 லட்சம் குறைந்துள்ளது என்று ரயில்வே நிர்வாகம் தெரிவித்துள்ளது.

ஒரேநாளில் கிடுகிடுனு உயர்ந்த பாதிப்பு- இந்தியாவை உலுக்கும் கொரோனா வைரஸ்!

* ஈரானில் 255 இந்தியர்களுக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதற்கிடையில் ஈரானில் சிக்கி தவிக்கும் 66 இந்தியப் பயணிகள் மற்றும் மாணவர்களை பத்திரமாக கொண்டு வர மத்திய அரசு தீவிர முயற்சி எடுத்து வருகிறது.

* இத்தாலியில் புதிதாக 500 பேர் கொரோனா வைரஸ் பாதிப்பிற்கு உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அதுவும் ஒரே நாளில் இத்தகைய பாதிப்பை உண்டாக்கி இருப்பது உலக நாடுகளையே அச்சத்தில் ஆழ்த்தியுள்ளது.




ஊரடங்கு உத்தரவை மீறும் நபர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்

0 Comments

    No Comments Here ..

Leave a comment

Post Comment





<

செய்திமடல்

ராசிப்பலன்கள்

கருத்துகணிப்பு