25,Apr 2024 (Thu)
  
CH
ஆரோக்கியம்

பணியிடங்களில் கொரோனாவிலிருந்து பாதுகாத்து கொள்ள என்ன செய்ய வேண்டும்?

கொரோனா வைரஸின் தாக்கம் பல இடங்களில் உள்ளதால் நமது பணியிடங்களை சுத்தமாக வைத்து கொள்வது அவசியமானதாகும்.

அந்தவகையில் கொரோனா வைரஸிடம் இருந்து விடுபட பணியிடங்களை எப்படி சுத்தமாக வைத்திருப்பது என இங்கு பார்ப்போம்.

காய்ச்சல், இருமல் அல்லது சளி போன்ற லேசான அறிகுறிகளை யாராவது காட்டினால், முழுமையாக குணமடையும் வரை வேலைக்குச் செல்ல வேண்டாம் என்று அறிவுறுத்துங்கள். முடிந்தால், வீட்டிலிருந்து வேலை செய்ய ஊக்குவிக்கவும்.

கதவு கைப்பிடிகள், தொலைபேசி ரிசீவர்கள், மேசை மேற்பரப்புகள், ஸ்டேபிளர் போன்ற ஒன்றுக்கு மேற்பட்ட நபர்கள் பயன்படுத்தும் உபகரணங்களையும் தவறாமல் சுத்தம் செய்யுங்கள்.

உங்கள் கைகளை சோப்பைப் பயன்படுத்தி அடிக்கடி நன்கு கழுவுங்கள். உங்கள் முகம், வாய், மூக்கு மற்றும் கண்களைத் தொடுவதைத் தவிர்க்கவும். COVID-19 வைரஸ் பொதுவாக தொடர்பு மூலமே பரவுகிறது.

முடிந்தவரை மக்கள் கூட்டம் அதிகரிப்பதை தவிர்க்கவும். கூட்டங்களை ஒத்திவைத்து, வீடியோ கான்பரன்சிங் மற்றும் குழு அழைப்பு போன்ற நவீன தகவல் தொடர்பு முறைகளைப் பின்பற்றவும்.




பணியிடங்களில் கொரோனாவிலிருந்து பாதுகாத்து கொள்ள என்ன செய்ய வேண்டும்?

0 Comments

    No Comments Here ..

Leave a comment

Post Comment





<

செய்திமடல்

ராசிப்பலன்கள்

கருத்துகணிப்பு