02,May 2024 (Thu)
  
CH
உலக செய்தி

கொரோனாவின் தாக்கம் உலகின் சில முக்கிய செய்தி

உலகளவில் கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 20 லட்சத்தை எட்டியுள்ளது.

இந்த எண்ணிக்கை பத்து லட்சத்தை எட்டிய இரண்டு வாரங்களுக்கு உள்ளாகவே தற்போது இந்த எண்ணிக்கை 20 லட்சமாக உயர்ந்துள்ளது.

ஆனால், உண்மையான தரவுகள் இதைவிட மிக அதிகமாக இருக்கும் என்றே கருதப்படுகிறது.

24 மணி நேரத்தில் 761 பேர் மரணம்- பிரித்தானியா

24 மணி நேரத்தில் பிரிட்டன் மருத்துவமனைகளில் புதிதாக 761 பேர் கொரோனா தொற்றால் உயிரிழந்துள்ளதாக தரவுகள் கூறுகின்றன.

அங்கு இதுவரை 12,868 மரணங்கள் பதிவாகியுள்ளன.

7.4 கோடி மக்களுக்கு கொரோனா பரவும் அபாயம் எச்சரித்துள்ளது

கைகளை கழுவ போதுமான தண்ணீர் இல்லாததால் அரபு பிராந்தியத்தில் சுமார் 7.4 கோடி மக்கள் கொரோனா தொற்று ஏற்படும் அபாயத்தில் இருப்பதாக ஐ.நா எச்சரித்துள்ளது.

மேலும் அங்கு 8.4 கோடி மக்களுக்கு அடிப்படை தேவையான குடிநீர் வசதிகூட வீடுகளில் இல்லை என்பதால் அவர்கள் பொதுவான நீர் ஆதாரத்தில் இருந்து தண்ணீர் எடுக்க வேண்டிய நிலை இருக்கிறது. இதனாலும் இந்த பெருந்தொற்று பரவும் அபாயம் இருப்பதாக கூறப்பட்டுள்ளது.

தமிழகத்தில் மேலும் 38 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது

தமிழநாட்டில் மேலும் 38 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று இருப்பது உறுதியாகியுள்ளது என்று மாநில சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார்.

இதன்மூலம் இதுவரை தமிழகத்தில் கோவிட்-19 தொற்றுக்கு உள்ளானவர்களின் எண்ணிக்கை 1242 ஆக உயர்ந்துள்ளது.

ஏற்கனவே சிகிச்சை பெற்றுவந்த 37 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.

இன்று கோவிட்-19 தொற்றால் இருவர் இறந்துள்ளனர். இதனால் மாநிலத்தில் இதுவரை கொரோனா வைரஸால் இறந்தவரக்ளின் எண்ணிக்கை 14 ஆகியுள்ளது.




கொரோனாவின் தாக்கம் உலகின் சில முக்கிய செய்தி

0 Comments

    No Comments Here ..

Leave a comment

Post Comment





<

செய்திமடல்

ராசிப்பலன்கள்

கருத்துகணிப்பு