05,Apr 2025 (Sat)
  
CH
உலக செய்தி

பிரித்தானியா 2.1 கோடி மருத்துவப் பொருட்களை கொள்வனவு செய்துள்ளது

கடந்த மூன்று வாரங்களில் மட்டும், பிரித்தானியா சீனாவிலிருந்து மொத்தமாக 2.1 கோடி தனிநபர் நோய் தடுப்புப் பொருட்களையும், 1000இற்க்கும் மேலான சுவாசக் கருவிகளையும் இறக்குமதி செய்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

பிரித்தானிய அரசு கொள்முதலாகவும், சீனத் தொழில் நிறுவனங்கள் வழங்கிய நன்கொடையாகவும் இந்த பொருட்கள் பிரித்தாவிற்குள் கொண்டுவரப்பட்டுள்ளது.

இந்த தகவலினை, சீனாவுக்கான பிரித்தானியாவின் தூதர் டேம் பார்பரா வுட்வார்ட் உறுதிப்படுத்தியுள்ளார். இதுகுறித்து அவர் கூறுகையில்,

சீனாவுக்கும் பிரித்தானியாவுக்கும் இடையில் உள்ள நீண்டகால வர்த்தக ஒத்துழைப்பு மற்றும் கொரோனா தொற்றைக் கூட்டாக எதிர்ப்பதில் இருநாடுகள் வெளிப்படுத்தி வரும் கூட்டு எழுச்சி ஆகியவற்றின் அடிப்படையில் இந்த நோய்த் தடுப்புப் பொருட்கள் பெறப்பட்டுள்ளன.

அத்தோடு, அண்மையில் பிரித்தானிய பிரதமர் பொரிஸ் ஜோன்சன், சீன ஜனாதிபதி ஸி ஜின் பிங்கை 2 முறை தொலைபேசி மூலம் தொடர்பு கொண்டு, இரு நாட்டு நெடுநோக்கு உறவில் ஒத்த கருத்துகளை எட்டியுள்ளனர்” என கூறினார்.




பிரித்தானியா 2.1 கோடி மருத்துவப் பொருட்களை கொள்வனவு செய்துள்ளது

0 Comments

    No Comments Here ..

Leave a comment

Post Comment





<

செய்திமடல்

ராசிப்பலன்கள்

கருத்துகணிப்பு