இடர்காலத்தில் வழங்கப்படும் 5,000 ரூபாய் கொடுப்பனவிற்காக பொதுமக்கள் எந்த அரசியல் கட்சி அல்லது வேட்பாளருடனும் பிணைப்பை ஏற்படுத்திக் கொள்ளத் தேவையில்லையென யாழ் மாவட்ட செயலகம் அறிவித்துள்ளது.
யாழ் மாவட்ட செயலாளர் இது குறித்து நேற்று அனுப்பி வைத்துள்ள செய்திக்குறிப்பில்,
தற்போது ஏற்பட்டுள்ள பேரிடர் கால நிலைமை காரணமாக சமூக நன்மைகள் நிகழ்ச்சித் திட்டத்தின் கீழ், ரூபா 5,000 கொடுப்பனவு, பொதுமக்களாகிய உங்களது வரிப்பணத்தில் வழங்கப்படுவதாகும். இதற்கு எந்தவொரு அரசியல் கட்சியோ, வேட்பாளரோ உரிமை கோர முடியாது.
அத்துடன், கொடுப்பனவை பெற எந்த அரசியல் கட்சி, வேட்பாளருடனும் விசேட பிணைப்பை கொள்ளத் தேவையில்லை. இது தொடர்பில் விசாரணைகள் மற்றும் முறைப்பாடுகள் இருப்பின் பொதுமக்கள் தமது பிரதேச செயலகத்தையோ, மாவட்ட செயலகத்தையோ நாட முடியும்.
இந்த நிவாரண நடவடிக்கையை கையாள கிராம மட்டத்தில் கிராம சேவகர், சமுர்த்தி உத்தியோகத்தர், பிரதேச மட்டத்தில் பிரதேச செயலாளர் பொறுப்பாக இருப்பார்கள் என குறிப்பிடப்பட்டுள்ளது.
0 Comments
No Comments Here ..