06,May 2024 (Mon)
  
CH
உலக செய்தி

ஆளும் கட்சியுடன் எதிர்க்கட்சி இணைந்தது!

இஸ்ரேல் வரலாற்றில் இதுவரை இல்லாத வகையில், ஓராண்டுக்குள் மூன்றாவது முறையாக நடைபெற்ற தேர்தலிலும் எந்தக் கட்சிக்கும் பெரும்பான்மை கிடைக்காத நிலையில், இஸ்ரேலில் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு மற்றும் எதிர்க்கட்சித் தலைவர் பெஞ்சமின் காண்ட் இணைந்து தேசிய ஒற்றுமை அரசு அமைப்பதற்கு அந்த நாட்டு நாடாளுமன்றம் ஒப்புதல் அளித்துள்ளது.

தேசிய ஒற்றுமை அரசிற்கான அதிகார பரவல் சட்டமூலம் மீது நாடாளுமன்றத்தில் நேற்று (வியாழக்கிழமை) வாக்கெடுப்பு நடத்தப்பட்டது.

இதில், சட்டமூலத்துக்கு ஆதரவாக 71 வாக்குகளும் எதிராக 37 வாக்குகளும் பதிவாகின. கூட்டணி அரசு அமைப்பதற்காக இரண்டு சட்டத் திருத்தங்கள் மேற்கொள்வதற்காக அந்த சட்டமூல தாக்கல் செய்யப்பட்டது என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.

கடந்த ஆண்டு மார்ச் மாதம், கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம் மற்றும் கடந்த மார்ச் மாதம் என மூன்று முறை நடைபெற்ற தேர்தலிலும் எந்த கட்சிக்கும் பெரும்பான்மை கிடைக்கவில்லை

இந்த நிலையிலேயே, மேலும் ஒரு தேர்தலைத் தவிர்க்கும் வகையில் ஆளும் கட்சியும், எதிர்க்கட்சியும் இணைந்து தேசிய ஒற்றுமை அரசு அமைக்க ஒப்பந்தம் மேற்கொண்டுள்ளது.

இந்த ஒப்பந்தம் நெத்தன்யாகு மற்றும் முன்னாள் இராணுவத் தலைவரான காண்ட்ஸ் ஆகியோர் அதிகாரத்தைப் பகிர்ந்து கொள்வதற்கு வழிவகுக்கும்.

இரு தலைவர்களும் மே 13ஆம் திகதி, தங்கள் புதிய நிர்வாகத்தில் சத்திய பிரமாணம் செய்வதாக கூறியுள்ளனர்.

அடுத்த 18 மாதங்களுக்கு நெத்தன்யாகு பிரதமராக பதவி வகிப்பார். மீதமுள்ள 18 மாதங்களுக்கு காண்ட்ஸ் பிரதமராக பதவி வகிப்பார்.

தொடர்ச்சியான ஊழல் குற்றச்சாட்டுகள் காரணமாக நெத்தன்யாகு ஆட்சி செய்ய தகுதியற்றவர் என்றும், கூட்டணி ஒப்பந்தத்தில் சில விதிகள் சட்டத்தை மீறியதாகவும் எதிர்தரப்புகள் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்தனர்.

ஆனால் புதன்கிழமை மாலை, நீதிமன்றம் நெத்தன்யாகு தலைமையிலான அரசாங்கத்தை அமைப்பதைத் தடுக்க எந்த சட்டபூர்வமான காரணமும் இல்லை என்று தீர்ப்பளித்தது.




ஆளும் கட்சியுடன் எதிர்க்கட்சி இணைந்தது!

0 Comments

    No Comments Here ..

Leave a comment

Post Comment





<

செய்திமடல்

ராசிப்பலன்கள்

கருத்துகணிப்பு