ஒரு சில நாடுகளில் COVID-19 தொற்று வேகமாக பரவும் நிலையில், சில நாடுகளில் நோய் பரவும் வேகம் குறைவடைவதற்கான காரணம் புதிய ஆய்வொன்றில் கண்டறியப்பட்டுள்ளது.
ஸ்பெயினில் 15,000 COVID-19 மரணங்கள் பதிவாகியுள்ள நிலையில், போர்துக்கலில் அந்த எண்ணிக்கை 500-க்கும் குறைவாக பதிவானமைக்கு காரணம் என்ன?
ஒரே பிராந்தியத்தில் இத்தகைய மாறுபட்ட தரவுகள் பதிவாகின்றமை வியப்பை ஏற்படுத்தினாலும் இந்த இரண்டு நாடுகளிலும் உள்ள தடுப்பூசிக் கொள்கைகள் இதற்கு காரணமாக அமைந்திருக்கலாம்.
COVID-19 எதிரான தடுப்பூசி அல்லாவிட்டாலும், BCG தடுப்பூசி சுவாச நோய்களைத் தடுப்பதற்கு பயன்படுத்தப்படுகின்ற பழமையான தடுப்பூசியாகும்.
BCG தடுப்பூசி மற்றும் புதிய கொரோனா வைரஸ் ஆகியவற்றுக்கிடையிலான தாக்கம் தொடர்பில் புதிய ஆய்வுகளில் கண்டறியப்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வௌியிட்டுள்ளன.
BCG தடுப்பூசி ஏற்றும் கொள்ளையில்லாத இத்தாலி, நெதர்லாந்து, அமெரிக்கா ஆகிய நாடுகளுடன் ஒப்பிடுகையில் இந்த தடுப்பூசி ஏற்றப்படுகின்ற நாடுகளில் பதிவான மரணங்களின் எண்ணிக்கை குறைவாக உள்ளதென ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.
புதிய கொரோனா வைரஸால் 17,000 மரணங்கள் பதிவான இத்தாலியில் ஒருபோதும் அனைவருக்கும் BCG தடுப்பூசி ஏற்றப்பட்டதில்லை.
63 மரணங்கள் மாத்திரம் பதிவாகியுள்ள ஜப்பானில் கடும் நடவடிக்கைகள் எடுக்கப்படாவிட்டாலும் அங்கு அனைத்து பிரஜைகளுக்கும் BCG தடுப்பூசி ஏற்றப்பட்டுள்ளது.
அத்தோடு, BCG தடுப்பூசியை இரண்டு கால கட்டங்களில் வழங்கியுள்ளதால், ஆய்வாளர்கள் ஜப்பான் மற்றும் ஈரான் ஆகிய நாடுகளை தமது ஆய்வின்போது ஒப்பிட்டுள்ளனர்.
ஜப்பான் 1947 ஆம் ஆண்டு இந்த தடுப்பூசி கொள்கையை நடைமுறைப்படுத்தியதுடன் ஈரானில் அது 1984 ஆம் ஆண்டே நடைமுறைக்கு வந்தது.
பிந்திய நிலையில் BCG தடுப்பூசி கொள்கை அறிமுகப்படுத்தப்பட்ட நாடுகளில் அதிகளவிலான மரணங்கள் பதிவாகியுள்ளதாகவும் ஆய்வறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்த தடுப்பூசி ஏற்றப்பட்ட வயது முதிர்ந்தவர்கள் பாதுகாக்கப்பட்டுள்ளதாகவும் அதில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
சுவாச நோய் தடுப்பூசி வழங்குவதன் மூலம் மருத்துவ பணியாளர்களை பாதுகாக்க முடியுமா என்பது தொடர்பில் ஆய்வுகளை நடத்துவதாக கடந்த வாரம் அவுஸ்திரேலிய ஆய்வாளர்கள் அறிவித்தனர்.
1908 ஆம் ஆண்டு பிரான்ஸ் விஞ்ஞானிகளான Albert Calmette மற்றும் Camille Guérin ஆகியோர் BCG தடுப்பூசியைக் கண்டுபிடித்தனர்.
பின்னர், Bacillus Calmette Guérin தடுப்பூசி அதாவது BCG தடுப்பூசி என இதற்கு பெயரிடப்பட்டது.
சுகாதார அமைச்சின் தரவுகளுக்கு அமைய, இலங்கையில் இந்த தடுப்பூசி ஏற்றும் நடவடிக்கை 1949 ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்டது.
1960 ஆம் ஆண்டு முதல் சிசுக்களுக்கு இந்த தடுப்பூசி ஏற்றும் நடவடிக்கை இடம்பெற்று வருவதாக அமைச்சு கூறுகின்றது.
0 Comments
No Comments Here ..