20,Jun 2026 (Sat)
  
CH
இலங்கை செய்தி

அரச மற்றும் தனியார் நிறுவனங்களின் செயற்பாடுகள் இந்த வார இறுதி வரை

ஊரடங்குச் சட்டம் அமுலில் உள்ள நிலையிலும் ஆரம்பிக்கப்பட்டுள்ள அரச மற்றும் தனியார் நிறுவனங்களின் செயற்பாடுகளை தொடர்ந்தும் இந்த வாரம் வரை முன்னெடுக்க உள்ளதாக அரச நிர்வாக அமைச்சு தெரிவித்துள்ளது.

மக்களின் செயற்பாடுகளை அவதானித்து அதற்கமைய நிறுவன மட்டத்திலான எதிர்கால நடவடிக்கைகள் தொடர்பில் தீர்மானிக்கப்படும் எனவும் அமைச்சு தெரிவித்துள்ளது.

கடந்த மார்ச் 20 திகதி முதல் நாடு முழுவதும் அமுலில் இருந்த ஊரடங்குச் சட்டம் நேற்று முதல் 23 மாவட்டங்களில் தளர்த்தப்பட்டதுடன் விசேடமாக களுத்துறை மற்றும் புத்தளம் மாவட்டங்களிலும் நீக்கப்பட்டது.

எனினும் ஊரடங்கு உத்தரவு இன்னும் நடைமுறையில் உள்ள கொழும்பு மற்றும் கம்பஹா மாவட்டங்களில் ஊரடங்கு உத்தரவை படிப்படியாக தளர்த்தி மக்களின் அன்றாட செயற்பாடுகளை மீள ஆரம்பிக்கும் பணிகள் நேற்று ஆரம்பமாயின.

அதன்படி, பொது மற்றும் தனியார் துறை ஊழியர்களுக்கு ஊரடங்கு உத்தரவு விதிக்கப்பட்ட மாவட்டங்களுக்கு செல்ல விசேட பொது போக்குவரத்து வசதிகள் செய்துக்கொடுக்கப்பட்டதுடன் சிலர் தமது பிரத்தியேக வாகனங்களை பயன்படுத்தினர்.

இதேவேளை கண்டி, அவிசாவளை, மஹவ, சிலாபம் மற்றும் பெலியத்தயில் இருந்து இன்றும் 10 க்கும் அதிகமான அலுவலக ரயில்கள் சேவையில் ஈடுபட்டு வருகின்றன.

போக்குவரத்து சேவைகளை வழங்க தனியார் பேருந்துகளைப் பயன்படுத்துவது குறித்து விடயத்துக்கு

பொறுப்பான அமைச்சர் மஹிந்த அமரவீர இன்று (12) சம்பந்தப்பட்ட தொழிற்சங்கங்களுடன் கலந்துரையாடவுள்ளார்.

இந்த நிலையில் ஊரடங்குச் சட்டம் அமுலில் உள்ள நிலையிலும் ஆரம்பிக்கப்பட்டுள்ள அரச மற்றும் தனியார் நிறுவனங்களின் செயற்பாடுகளை தொடர்ந்தும் இந்த வாரம் வரை முன்னெடுக்க உள்ளதாக அரச நிர்வாக அமைச்சு தெரிவித்துள்ளது.

இந்த காலகட்டத்தில் மக்களின் நடத்தைகளை கருத்தில் கொண்டு நிறுவன அளவில் நடவடிக்கைகள் எடுக்கப்படும் எனவும் அந்த அமைச்சு மேலும் தெரிவித்துள்ளது




அரச மற்றும் தனியார் நிறுவனங்களின் செயற்பாடுகள் இந்த வார இறுதி வரை

0 Comments

    No Comments Here ..

Leave a comment

Post Comment





<

செய்திமடல்

ராசிப்பலன்கள்

கருத்துகணிப்பு