15,Jan 2025 (Wed)
  
CH
இந்திய செய்தி

ஊரடங்கு இன்றுடன் முடிகிறது என்ன செய்யப்போகிறது மத்திய அரசு? – ப.சிதம்பரம்

கொரோனா வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்த கொண்டுவரப்பட்ட ஊரடங்கில் வந்த 3-ம் கட்டம் இன்றுடன் முடிகிறது, அடுத்து என்ன செய்யப்போகிறது மத்திய அரசு என காங்கிரஸ் மூத்த தலைவரும், முன்னாள் நிதியமைச்சருமான ப.சிதம்பரம் கேள்வி எழுப்பியுள்ளார்

கொரோனா வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்தும் நடவடிக்கையில் கடந்த மார்ச் 25-ம் திகதி முதல்கட்ட ஊரடங்கைமத்திய அரசுஅறிவித்தது. ஆனால் வைரஸின் பாதிப்பு குறையாததையடுத்து, அடுத்த இரு கட்டங்களுக்கு ஊரடங்கு நீட்டிக்கப்பட்டது. தற்போது மூன்றாவது கட்டம் மே 3-ம் திகதி முதல் 17-ம் திகதிவரை அமுலில் இருக்கிறது.

4-வது கட்ட ஊரடங்கு இருக்கிறது என பிரதமர் மோடி சூசகமாதத் தெரிவித்து, மற்ற 3 ஊரடங்கு போல் இல்லாமல் வித்தியாசமாக இருக்கும் எனத் தெரிவித்தார்.

அதேசமயம், ஊரடங்கினை நாடுமுழுவதும் தளர்த்துவதற்கு என்ன திட்டத்தை மத்தியஅரசு வைத்துள்ளது என்று காங்கிரஸ் கட்சி தொடந்து கேள்வி எழுப்பி வருகிறது.

காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் ப.சிதம்பரம், முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் , ராகுல் காந்தி உள்ளி்ட்ட தலைவர்களும் ஊரடங்கு நீக்கும் திட்டம் குறித்து மத்திய அரசு விளக்கம் அளிக்க வேண்டும் என விலியுறுத்தியுள்ளனர்.




ஊரடங்கு இன்றுடன் முடிகிறது என்ன செய்யப்போகிறது மத்திய அரசு? – ப.சிதம்பரம்

0 Comments

    No Comments Here ..

Leave a comment

Post Comment





<

செய்திமடல்

ராசிப்பலன்கள்

கருத்துகணிப்பு