இறுதியாக இனங்காணப்பட்டு 11 கொரோனா தொற்றாளர்களும் கடற்படையைச் சேர்ந்தவர்கள் என இராணுவத் தளபதி சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.
நேற்றைய தினத்தில் 21 கொரோனா நோயாளிகள் பதிவானதாக தொற்றுநோய் விஞ்ஞான பிரிவு குறிப்பிட்டுள்ளது.
அதன்படி நாட்டில் கொரோனா நோயாளிகளின் எண்ணிக்கை 981 ஆக அதிகரித்துள்ளது.
அதில் இரண்டு பேர் இங்கிலாந்திலிருந்து இலங்கை வந்தவர்கள் என குறிப்பிடப்பட்டுள்ளது.
நேற்றைய தினம் 18 பேர் பூரணமாக குணமடைந்து வீடு திரும்பியுள்ள நிலையில் 538 பேர் இதுவரை பூரணமாக குணம் அடைந்துள்ளனர்.
தற்போது 434 பேர் வைத்திய கண்காணிப்பின் கீழ் உள்ள தாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.
0 Comments
No Comments Here ..