புலம்பெயர் தொழிலாளர்களுக்காக கடந்த 1 ஆம் திகதி முதல் சிறப்பு ரெயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன. அதுபோல், ஊரடங்கு காரணமாக, சொந்த ஊருக்கு திரும்ப முடியாதவர்களுக்காக, கடந்த 12 ஆம் திகதி முதல் ராஜ்தானி வழித்தடங்களில் சிறப்பு ரெயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன.
டெல்லிக்கும், முக்கிய நகரங்களுக்கும் இடையே இயக்கப்படும் இந்த ரயில்களில் ராஜ்தானி ரயில் கட்டணம் வசூலிக்கப்படுகிறது.
கடந்த 12 ஆம் திகதி முதல் 16 ஆம் திகதி வரை 5 நாட்களில், இந்த ரயில்களில் 3 லட்சத்து 48 ஆயிரத்து 634 பேர் அவரவர் சொந்த ஊர்களுக்கு சென்றுள்ளனர். இதன்மூலம் ரயில்வேக்கு 69 கோடியே 33 லட்சத்து 67 ஆயிரத்து 735 ரூபாய் வருவாய் கிடைத்துள்ளது.
முதலில், இந்த ரயில் முன்பதிவில், காத்திருப்போர் பட்டியல் டிக்கெட் அனுமதிக்கப்படவில்லை. ஆனால், இந்த ரயில்களுக்கு அதிகமான வரவேற்பு இருப்பதால், வருகிற 22 ஆம் திகதி முதல் இயக்கப்படும் ரயில்களுக்கு காத்திருப்போர் பட்டியல் டிக்கெட் அனுமதிக்கப்படுகிறது.
அதாவது, முதல் வகுப்பு ஏ.சி., எக்சிகியுட்டிவ் வகுப்புக்கு தலா 20 டிக்கெட் வரையும், மூன்றடுக்கு ஏ.சி. பெட்டிக்கு 100 டிக்கெட் வரையும், இரண்டடுக்கு ஏ.சி. பெட்டிக்கு 50 டிக்கெட் வரையும், தூங்கும் வசதி கொண்ட பெட்டிக்கு 200 டிக்கெட் வரையும், சேர்கார் பெட்டிக்கு 100 டிக்கெட் வரையும் காத்திருப்போர் பட்டியல் டிக்கெட் அனுமதிக்கப்படும். ஆனால், ஆர்.ஏ.சி. டிக்கெட் கிடையாது.
0 Comments
No Comments Here ..