17,May 2024 (Fri)
  
CH
இலங்கை செய்தி

இராணுவத்திற்கு அழுத்தம் கொடுக்க எந்த ஒரு அமைப்பையும் அனுமதிக்க முடியாது

இராணுவத்தின் மீது அழுத்தம் கொடுக்கும் எந்தவொரு சர்வதேச அமைப்பிற்கும் நாட்டில் இடமிருக்காது என ஜனாதிபதி எச்சரிக்கை விடுத்துள்ளார்.

11 ஆவது தேசிய நினைவுதின கொண்டாட்ட நிகழ்வில் உரையாற்றிய போதே ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ இதனைத் தெரிவித்துள்ளார்.

நாட்டுக்கு தீங்கு விளைவிக்கும் எந்தவொரு நடவடிக்கையிலும் சர்வதேச அமைப்பு அல்லது நிறுவனமொன்று தொடர்ந்து ஈடுபட்டு வருமானால் அவைகளை நாட்டிலிருந்து வெளியேற்றுவதற்கு ஒருபோதும் தயங்க மாட்டேன் என்றும் அவர் கூறினார்.

மேலும் வல்லரசு நாடுகளின் தலைவர்கள் படையினருக்கு எதிராக எடுக்கும் எந்த நடவடிக்கையையும் அனுமதிக்க மாட்டோம் என்றும் ஜனாதிபதி உறுதியளித்துள்ளார்.

“இதுபோன்று, ஒரு சிறிய நாட்டில் நம்முடைய படை வீரர்கள் எவ்வளவு தியாகம் செய்தார்கள், எவரும் அல்லது எந்த அமைப்பும் அவர்கள் மீது தேவையற்ற அழுத்தம் கொடுக்கவோ துன்புறுத்தவோ நான் அனுமதிக்க மாட்டேன்” என்றும் அவர் வலியுறுத்தினார்.




இராணுவத்திற்கு அழுத்தம் கொடுக்க எந்த ஒரு அமைப்பையும் அனுமதிக்க முடியாது

0 Comments

    No Comments Here ..

Leave a comment

Post Comment





<

செய்திமடல்

ராசிப்பலன்கள்

கருத்துகணிப்பு