06,May 2024 (Mon)
  
CH
உலக செய்தி

ரஷ்யாவில் கொரோனா வைரஸ் தொற்றால் 3 இலட்சத்துக்கும் மேற்பட்டோர் பாதிப்பு

ரஷ்யாவில் கொரோனா வைரஸ் (கொவிட்-19) தொற்றால் பாதிப்பட்டவர்களின் எண்ணிக்கை 3 இலட்சத்தை கடந்துள்ளது.

இறுதி நிலவரப்படி, ரஷ்யாவில் கொரோனா வைரஸ் தொற்றால் பாதிப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 308,705ஆக உள்ளது.

கடந்த 24 மணித்தியால நிலவரப்படி, வைரஸ் தொற்றால் 8,764பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக ரஷ்யாவின் கொரோனா வைரஸ் நெருக்கடியை கண்காணிக்கும் மையம் தெரிவித்துள்ளது.

இதன்மூலம் தொடர்ச்சியாக ஐந்தாவது நாளாக 10 ஆயிரத்திற்கும் குறைவான பாதிப்பு எண்ணிக்கை பதிவாகியுள்ளது.

மேலும், வைரஸ் தொற்றுக்கு கடந்த 24 மணித்தியாலத்தில் 135பேர் உயிரிழந்துள்ளனர். ரஷ்யாவில் வைரஸ் தொற்று பரவியதிலிருந்து பதிவான அதிகப்பட்ச உயிரிழப்பு எண்ணிக்கை இதுவாகும்.

உலகளவில் அதிக பாதிப்பை எதிர்கொண்டுள்ள இரண்டாவது நாடான ரஷ்யாவில், வைரஸ் தொற்றுக்கு இதுவரை மொத்தமாக 2,972பேர் உயிரிழந்துள்ளனர்.

மேலும், கொரோனா வைரஸ் தொற்றுக்கு 220,341 பேர் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருபவர்களில் 2,300பேரின் நிலை மிகவும் கவலைக்கிடமாக உள்ளது. மேலும், 85,392பேர் பூரண குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்




ரஷ்யாவில் கொரோனா வைரஸ் தொற்றால் 3 இலட்சத்துக்கும் மேற்பட்டோர் பாதிப்பு

0 Comments

    No Comments Here ..

Leave a comment

Post Comment





<

செய்திமடல்

ராசிப்பலன்கள்

கருத்துகணிப்பு