28,Apr 2024 (Sun)
  
CH
கனடா

ஒன்ராறியோவில் சமூக கூட்டங்களுக்கான கட்டுப்பாடுகள் நீடிப்பு!

கொரோனா வைரஸ் (கொவிட்-19) அச்சுறுத்தல் காரணமாக நடைமுறையில் உள்ள சமூக கூட்டங்களுக்கான கட்டுப்பாடுகள் உட்பட, மாகாணத்தில் உள்ள அனைத்து அவசர உத்தரவுகளையும் மே மாதம் 29ஆம் திகதி வரை ஒன்ராறியோ நீட்டித்துள்ளது.

வழிகாட்டுதல்களில் வாகனங்களை இரண்டு மீட்டர் அல்லது அதற்கு மேற்பட்ட இடைவெளியில் வைத்திருத்தல், ஒரே வீட்டின் உறுப்பினர்கள் மட்டுமே ஒரு வாகனத்தில் இருக்க முடியும். மக்கள் தங்கள் வாகனங்களை விட்டு வெளியேற முடியாது. ஒரு வாகனத்திற்கு வெளியில் இருந்து ஒரே நேரத்தில் ஐந்து பேருக்கு மேல் சேவையை நடத்த முடியாது. அவர்கள் குறைந்தது இரண்டு மீட்டர் இடைவெளியில் இருக்க வேண்டும் போன்ற கட்டுப்பாடுகள் இதில் அடங்குகின்றன.

இதுகுறித்து சுகாதாரத் தலைமை மருத்துவ அதிகாரி டாக்டர் டேவிட் வில்லியம்ஸ் கூறுகையில், “நாம் நமது விஞ்ஞானிகள், பல்வேறு மாதிரிகள் மற்றும் நிபுணர்களுடன் பேசி வருகிறோம். நாடு முழுவதும் எங்கள் பல்வேறு சகாக்கள் என்ன செய்கிறார்கள் என்பதை நாங்கள் பார்த்துக் கொண்டிருக்கிறோம்.

இந்த வாரத்தின் பிற்பகுதியில் இது குறித்து ஏதாவது அறிவிக்க வேண்டும் என்று நாம் நம்புகிறோம். ஆனால் நாங்கள் இன்னும் அந்த பரிந்துரைகளை மறுஆய்வு செய்து வருகிறோம்” என கூறினார்.

ஒன்ராறியோவில் இதுவரை கொரோனா வைரஸ் தொற்றுக்கு 23,384பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். 1,919பேர் உயிரிழந்துள்ளனர்.




ஒன்ராறியோவில் சமூக கூட்டங்களுக்கான கட்டுப்பாடுகள் நீடிப்பு!

0 Comments

    No Comments Here ..

Leave a comment

Post Comment





<

செய்திமடல்

ராசிப்பலன்கள்

கருத்துகணிப்பு