07,May 2024 (Tue)
  
CH
ஆன்மிகம்

இன்றைய ராசிபலன்


மேஷம்

  • மேஷம்: ராசிக்குள் சந்திரன் இருப்பதால் பல வேலைகளையும் இழுத்து போட்டு பார்க்க வேண்டி வரும். மற்றவர்களை குறை கூறிக் கொண்டிருக்காமல் உங்களை மாற்றி கொள்ள பாருங்கள். வியாபாரத்தில் வேலையாட்கள் அதிருப்தி அடைவார்கள். உத்தியோகத்தில் வேலைச்சுமை அதிகரிக்கும். சகிப்புத்தன்மை தேவைப்படும் நாள்.

ரிஷபம்

  • ரிஷபம்: குடும்பத்தைப் பற்றியகவலைகள் வந்து நீங்கும். செலவுகள் கட்டுக்கடங்காமல் போகும். திடீர்பயணங்களால் அலைச்சல் அதிகரிக்கும். நண்பர்களால் பிரச்னைகள் வரக்கூடும்.வியாபாரத்தில் பாக்கிகளை போராடி வசூலிப்பீர்கள். உத்தியோகத்தில் சோர்வு வந்து நீங்கும். தடைகளை தாண்டி முன்னேறும் நாள்.

மிதுனம்

  • மிதுனம்: ஆன்மிகப் பெரியோரின் ஆசி கிட்டும். பெற்றோரின் ஆதரவு பெருகும். நெடுநாட்களாக நீங்கள் பார்க்க நினைத்த ஒருவர் உங்களை தேடி வருவார். மனைவி வழியில் மதிக்கப்படுவீர்கள். வியாபாரத்தை பெருக்குவீர்கள். உத்தியோகத்தில் சக ஊழியர்களின் ஒத்துழைப்பால் நினைத்ததை முடிப்பீர்கள். இனிமையான நாள்.

கடகம்

  • கடகம்: எதையும் சமாளிக்கும் மனப்பக்குவம் கிடைக்கும். அதிகாரப் பதவியில் இருப்பவர்கள் உதவுவார்கள். வீடு வாகனத்தை சீர் செய்வீர்கள். வியாபாரத்தில் வாடிக்கை
  • யாளர்களின் எண்ணிக்கை அதிகரிக்கும். அலுவலகத்தில் மரியாதை கூடும். முயற்சியால் முன்னேறும் நாள்.

சிம்மம்

  • சிம்மம்: கணவன்- மனைவிக்குள் அன்யோன்யம் பிறக்கும். திடீர் பணவரவு உண்டு. புது முடிவுகள் எடுப்பீர்கள். நீண்ட நாட்களாக செல்ல வேண்டுமென்று நினைத் திருந்த இடத்திற்கு சென்று வருவீர்கள் வியாபாரத்தில் நல்ல மாற்றங்கள் ஏற்படும் .புதிய பாதைதெரியும் நாள்.

கன்னி

  • கன்னி: சந்திராஷ்டமம் தொடர் வதால் சிக்கலான சவாலான காரியங்களையெல்லாம் கையில் எடுத்துக்கொண்டிருக்காதீர்கள். தேவை யற்ற வெளி உணவுகளை தவிர்ப்பது நல்லது. வியாபாரத்தில் வேலையாட்களை பகைத்துக் கொள்ள வேண்டாம். உத்தியோ கத்தில் வளைந்து கொடுத்துப் போவது நல்லது. புதிய முயற்சிகள் தாமதமாகும் நாள்.

துலாம்

  • துலாம்: பிள்ளைகள் உங்கள் அருமையை புரிந்துகொள்வார்கள். விரும்பிய பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். பயணங்களால் புத்துணர்ச்சி பெறுவீர்கள். மனைவி வழியில் ஆதரவு பெருகும். வியாபாரத்தில் புதியவாடிக்கையாளர்கள் தேடி வருவார்கள். தன்னம் பிக்கை துளிர்விடும் நாள்.

விருச்சிகம்

  • விருச்சிகம்: குடும்பத்தாரின் விருப்பங்களை நிறை வேற்றுவீர்கள். நெருங்கியவர்களுக்காக மற்றவர் களின் உதவியை நாடுவீர்கள். பிரபலங்களின் நட்பு கிட்டும். சொத்து
  • சிக்கலில்ஒன்று தீரும். வியாபாரத்தில் பழையவேலையாட்களை மாற்றுவீர்கள். உத்தியோகத்தில் சில தந்திரங்களை கற்றுக் கொள்வீர்கள். அமோகமான நாள்.

தனுசு

  • தனுசு: புதிய திட்டங்கள் தீட்டுவீர்கள். உறவினர்கள் வீடு தேடிவருவார்கள். சிக்கனமாக செலவழித்து சேமிக்கத் தொடங்குவீர்கள். சுற்றியிருப்பவர்களின் சுயரூபம் தெரிய வரும். ஆன்மிக நாட்டம் அதிகரிக்கும். வியாபாரத்தில் நெளிவு சுளிவுகளை கற்று கொள்வீர்கள். உத்தியோகத்தில் எல்லோரும் மதிப்பார்கள். புதுமை படைக்கும் நாள்.

மகரம்

  • மகரம்: திட்டமிட்ட காரியங்களை சிறப்பாக முடிப்பீர்கள். தாய்வழி உறவினர்களுடன் மனஸ்தாபம் வந்து நீங்கும். கலைப் பொருட்கள் வாங்குவீர்கள். வியாபாரத்தில் அதிரடியான செயல்களால் போட்டிகளை சமாளிப் பீர்கள். உத்தியோகத்தில் சூழ்ச்சிகளை முறியடிப்பீர்கள். உழைப்பால் உயரும் நாள்.

கும்பம்

  • கும்பம்: பணப்புழக்கம் அதிக ரிக்கும். நண்பர்கள் உறவினர்கள் மத்தியில் செல்வாக்கு உயரும். விருந்தினர்களின் வருகையால் வீடுகளைக்கட்டும். வியாபாரத்தில் புது ஒப்பந்தங்களால் லாபம் பெருகும். உத்தியோகத்தில் உங்கள் கருத்திற்கு ஆதரவு பெருகும். திடீர் யோகம் கிட்டும் நாள்.

மீனம்

  • மீனம்: குடும்பத்தில் சந்தோஷம் நிலைக்கும். கைமாற்றாக வாங்கியிருந்த பணத்தை திருப்பித்தருவீர்கள். புதியவகள் நட்பால் உற்சாகமடைவீர்கள். வியாபாரத்தில் வேலையாட்கள் ஒத்துழைப்பார்கள். உத்தியோகத்தில் பணிகளை விரைந்து முடிப்பீர்கள். புதிய அத்தி யாயம் தொடங்கும் நாள்.





இன்றைய ராசிபலன்

0 Comments

    No Comments Here ..

Leave a comment

Post Comment





<

செய்திமடல்

ராசிப்பலன்கள்

கருத்துகணிப்பு