20,Apr 2024 (Sat)
  
CH
ஆரோக்கியம்

இரவில் உணவை தாமதமாக சாப்பிட்டால் ஏற்படும் விளைவுகள்

வாழ்க்கை நன்றாக வாழ்வதற்கே என்கிற எண்ணம் இளைய தலைமுறையினரிடம் வெகு வேகமாக பரவி வருகின்றது. பெரியவர்களின் பேச்சை தற்பொழுது உள்ள இளைய தலைமுறையினர் சிறிதளவும் கேட்பதில்லை. அதிலும் உணவைப் பற்றிய அறிவுரைகளை நாம் ஏற்றுக்கொள்வதே கிடையாது.

இரவு 8 மணிக்கு மேல் கட்டாயம் உணவு சாப்பிட கூடாதுன்னு நம் பெரியவர்கள் நம் தாத்தா, பாட்டி கூறியதில் பல உண்மைகள் உள்ளன. அப்படி 8 மணிக்கு மேல் சாப்பிடப்படும் உணவானது நமது உடலில் கொழுப்பாக சேமிக்கப்படுகிறது.

இரவு உணவை காலதாமதமாக உண்பதால் உயிர் இரத்த அழுத்தம் ஏற்பட்டு இருதய நோய்க்கு முக்கிய காரணமாக மாறுகிறது.

பண்டைய காலத்தில் நமது மக்கள் சூரியன் உதிக்கும் முன் எழுந்து தன் கடைமைகளை செய்துவிட்டு சூரியன் மறையும் போது இரவு உணவையும் உண்டு உறங்க சென்று விடுவார்கள். இதனால் அவர்கள் நோயின்றி ஆரோக்கியமாக வாழ்ந்து வந்தார்கள்.

ஆனால், இன்றோ நாம் இந்த இயந்திர வாழ்கையில் சூரியன் உதித்ததை கூட தெரியாமல் உறங்கிகொண்டு இருக்கிறோம். இதனால் அந்த நாள் முழுக்க நாம் புத்துணர்வின்றி சோம்பேறித்தனமாக பொழுதை கழிக்கிறோம்.

அதுவும் இரவு மணி 10 அல்லது 11 ஆன பிறகு தான் இரவு உணவு என்று உள்ளதையே இங்கு பலருக்கு ஞாபகம் வருகிறது.

இப்படி காலதாமதமாக உணவு உண்பதால் ஏற்படும் பிரச்சனைகள் பற்றி பார்ப்போம்

·        இரவு நேரத்தில் அவசர அவசரமாக உண்டு உறங்க செல்வதால் உடல் பருமன் அடைய வாய்ப்புகள் அதிகமாக உள்ளது.

·        உறக்கம் என்பது ஒரு மனிதனுக்கு இறைவன் குடுத்த வரமாகும். இரவில் தாமதமாக உணவு சாப்பிடுவதால் இரவு உணவு செரிமாணம் ஆக நேரம் அதிகமாக எடுப்பதால் தூக்கம் தடைபடுகிறது என்று இது மருத்துவ ஆராய்ச்சியில் தெரியவந்துள்ளது. தூக்கமின்மையால் பலர் பெரிதும் அவதிப்பட அதிகம் வாய்ப்பு உள்ளது.

·        இரவில் காலதாமதமாக சாப்பிட்ட உடன் உறங்குவதால் நாம் உண்ட உணவில் உள்ள அமிலங்கள் உணவு குழாயில் மேல் நோக்கி செல்கிறது. இதனால் நெஞ்செறிச்சல் உண்டாகும்.

·        இரவு நேரத்தில் உணவின் அளவை குறைத்தால் உடல் பருமன் குறையும் என உணவை சிலர் தவிர்கிறார்கள் இது மிகப் பெரிய பிரச்னைகளுக்கு வழி வகுக்கும்.

·        கண்ட நேரங்களில் உணவை உண்பதால் குடல் நோய் வர காரணமாகும். வயிற்றுவலி, மலச்சிக்கல் அல்லது வயிற்றுப்போக்கு மற்றும் வயிற்றுவீக்கம், வயிறு சமந்தமான உபாதைகள், வயிற்று எரிச்சல் ஏற்படுகிறது.

·        உணவை அடிக்கடி தவிர்ப்பதால் மன அழுத்தம் உண்டாகும். ஏனெனில், மன அழுத்ததிற்கு முக்கிய காரணம் உடல் மற்றும் மனம். உடல் அதன் வேலையை சரியாக செய்யாத பொது மனஅழுத்தம் ஏற்படும். சரியான நேரத்தில் உணவை சாப்பிடுவது நன்மை பயக்கும்.

·        ஆரோக்கியமான உணவு என்பது காலை உணவை அரக்கனை போலவும், மதிய உணவு அரசனை போலவும், இரவு உணவு யாசகனை போலவும் உண்ண வேண்டும்.

·        இரவு உணவை இரவு 7 மணிக்கு முன்பே சாப்பிடுவது நல்லது.




இரவில் உணவை தாமதமாக சாப்பிட்டால் ஏற்படும் விளைவுகள்

0 Comments

    No Comments Here ..

Leave a comment

Post Comment





<

செய்திமடல்

ராசிப்பலன்கள்

கருத்துகணிப்பு