திருமண நிகழ்வுகள் குறித்த வழிகாட்டல் குறிப்புக்களை சுகாதார அமைச்சு வெளியிட்டுள்ளது.
சுகாதார அமைச்சின் சுற்றுச்சூழல் சுகாதாரம், தொழில்சார் சுகாதாரம் மற்றும் உணவு பாதுகாப்பு பிரதி பணிப்பாளர் நாயகம் வைத்தியர் லக்ஷ்மன் கம்லத் இந்த அறிவுறுத்தல்களை வெளியிட்டுள்ளார்.
திருமண நிகழ்வுகள் மற்றும் வேறு நிகழ்வுகள் மண்டபத்தில் நடத்துவதெனில் மண்டபத்தின் கொள்ளவில் 40% வரையானவர்களே அழைக்கப்பட வேண்டும். எந்த சூழ்நிலையிலும் பங்கேற்பாளர்களின் எண்ணிக்கை 100ஐ விட அதிகரிக்க கூடாது. 100 பேரை விட அதிகமானவர்கள் பங்கேற்பது சட்டவிரோதமானது.
100 பேர் கலந்து கொண்டால் அவர்களிற்கு போதுமான இடம் இருக்க வேண்டும். நிகழ்வில் கலந்து கொள்பவர்கள் கட்டாயம் ஒரு மீற்றர் சமூக இடைவெளியை பேண வேண்டும்.
வைபங்களில் கலந்து கொள்பவர்கள் கட்டாயமாக முகக்கவசம் அணிய வேண்டும்.
பிரதேச சுகாதார வைத்திய அதிகாரி அல்லது பொதுச்சுகாதார பரிசோதகரிடம் முன்னனுமதி பெறப்பட்டிருக்க வேண்டும்.
மண்டபங்களின் இருக்கைகள் உள்ளிட்ட தளபாடங்கள் கிருமி நீக்கம் செய்யப்பட வேண்டும்.
விருந்தினர்கள் மண்டபத்திற்குள் நுழைவதற்கு முன்னர் வாசலில் கைகழுவ வசதியேற்படுத்த வேண்டும். கால்களால் இயக்கும் நீர்ப்பம்பிகள் விரும்பத்தக்கது.
மண்டபத்திற்கு நுழைவதற்கு முன்னர் அனைத்து விருந்தினர்களின் உடல் வெப்பநிலையும் சரிபார்க்கப்பட வேண்டும்.
எல்லாச்சந்தர்ப்பங்களிலும் இருவருக்கிடையில் ஒரு மீற்றர் இடைவெளி பேணப்பட வெண்டும்.
மண்டபம் போதுமான காற்றோட்ட வசதியுடன் இருக்க வேண்டும்.
முத்தமிடல், கைகுலுக்குதல் அனுமதிக்கப்பட கூடாது.
விருந்தினர்கள் தளபாடங்கள், கண்ணாடிகளை தொடுவதை தவிர்க்க வேண்டும்.
உணவு பரிமாறுவதற்கு தனியொருவரை நியமிக்க வேண்டும்.
குழுக்களாக புகைப்படம் எடுப்பதை தவிர்க்கவும்.
நிகழ்வின் முடிவில் மண்டபம் கிருமி நீக்கம் செய்யப்பட்டு, சுத்தம் செய்யப்பட வேண்டும்.
0 Comments
No Comments Here ..