21,Nov 2024 (Thu)
  
CH
ஆரோக்கியம்

தைராய்டு பிரச்சனைக்கு தேங்காய் பூ சிறந்த மருந்து

தேங்காய் பூ என்பது முற்றிய தேங்காயில் உண்டாகும் கருவளர்ச்சியே ஆகும். தேங்காய்பூவில், தேங்காய் மற்றும் இள நீரில் இருப்பதை விட அதிக சத்துக்கள் உள்ளது.

இளநீரில் இருக்கும் சதைப் பற்றினைப் போல ருசி இருக்கும். அதன் நன்மைகளைப் பற்றி தெரிந்தால் தேங்காய் பூவை தேடி கண்டுபிடித்து சாப்பிடத் தோன்றும்.

தேங்காய்பூவின் எண்ணற்ற மருத்துவக் குணங்கள்:

  • தேங்காய் பூவில் மிக அதிக ஊட்டச் சத்து இருப்பதால் நோய் எதிர்ப்பு சக்தி இருமடங்கு அதிகரிக்கும். பருவ கால தொற்று நோய்களிலிருந்து முழுமையான பாதுகாப்பை தேங்காய் பூ கொடுக்கும்.
  • மன அழுத்தம் அல்லது வேலைப்பளு அதிகம் இருப்பவர்கள் தேங்காய் பூவை சாப்பிட்டால் முழு எனர்ஜி கிடைக்கும்.
  • உங்களுக்கு ஜீரண சக்தி குறைவாக இருந்தால் தேங்காய் பூ சாப்பிடலாம். இதிலுள்ள மினரல், விட்டமின் உங்கள் குடலுக்கு பாதுகாப்பு அளிக்கிறது. மலச்சிக்கலை குணமாக்கும்.
  • தேங்காய் பூ இன்சுலின் சுரப்பை தூண்டுகிறது. இதனால் ரத்தத்தில் அதிகப்படியான சர்க்கரையை கட்டுபடுத்துகிறது.
  • இதயத்தில் படியும் கொழுப்பை தேய்காய்ப்பூ கரையச் செய்கிறது. ரத்தத்தில் சேரும் கெட்ட கொழுப்பை கரைக்கிறது.
  • நீங்கள் தைராய்டு பிரச்சனையில் பாதிக்கப்பட்டிருந்தால் தேங்காய் பூவை சாப்பிடுங்கள். இது தைராய்டு சுரப்பை ஒழுங்குபடுத்துகிறது. தைராய்டு பாதிப்பை குணப்படுத்துகிறது.
  • தேங்காய்பூ ஃப்ரீ ரேடிகல்ஸை வெளியேற்றுகிறது. மனித உடலில் உள்ள செல்களை பாதுகாக்கிறது. மனித உடலில் புற்று நோய் வராமல் தடுக்கிறது.
  • உடல் எடையை கட்டுக் கோப்பாக வைத்திருக்க தேங்காய்பூ உதவுகிறது. இதில் குறைந்த அளவு கலோரி இருப்பதால் உடல் எடை குறைய உதவுகிறது. வளர்சிதை மாற்றத்தை தூண்டுவதால் கொழுப்பு சேராமால் வேகமாக உடல் எடையை குறைக்கும்.
  • தேங்காய்பூ சிறு நீரக பாதிப்பை குறைக்கிறது. சிறு நீரக தொற்று நோய்களை குணப்படுத்தும். நச்சுக்களை வெளியேற்றி ஆரோக்கியமான சிரு நீரகத்தை பெறலாம்.
  • தேங்காய் பூவில் முக்கியமான முதுமையை தடுக்கும் ஆன்டி ஒக்ஸிடென்ட் நிறைந்துள்ளது. சுருக்கங்கள், வயதான தோற்றம், சரும தொய்வு போன்றவை நம்மை நெருங்க விடாது. சூரியனால் உண்டாகும் சரும பாதிப்புகளை தடுக்கிறது.





தைராய்டு பிரச்சனைக்கு தேங்காய் பூ சிறந்த மருந்து

0 Comments

    No Comments Here ..

Leave a comment

Post Comment





<

செய்திமடல்

ராசிப்பலன்கள்

கருத்துகணிப்பு