26,Apr 2024 (Fri)
  
CH
கட்டுரைகள்

ஊரடங்கு முடியும் நேரத்தில் நீங்கள் பாதுகாப்பாக இருப்பது எப்படி?

உங்களோடு வரிசையில் நிற்கும் ஒருவர் திடீரென தும்மினால், அது உங்களுக்கு எந்த அளவிற்கு ஆபத்தாக அமையும்? நீங்கள் உணவு விடுதிக்குப் போகலாமா? அரசின் பேருந்து அல்லது ரயில் சேவையை பயன்படுத்தலாமா?

உலக நாடுகள் பலவும், தற்போது ஊரடங்கிலிருந்து கொஞ்சம் கொஞ்சமாக வெளியே வரத்தொடங்கியுள்ளன. பொது வெளிகளில் மக்கள் செல்ல அரசுகள் மெதுவாக அனுமதிகளை வழங்கத் தொடங்கியுள்ளன இந்த நிலையில், ஒருவர் கொரோனா வைரஸ் தொற்றிற்கு ஆளாவதற்கான மற்றும் வைரஸை பரப்புவதற்கான வாய்ப்புகளும் அதிகரிக்கின்றன. இதன்மூலமாக, வைரஸ் இரண்டாவது முறையாக நாட்டினுள் பரவலாம் என்ற அச்சமும் மக்களிடையே காணப்படுகிறது.

இத்தகைய அச்சத்தை தவிர்த்து, கோவிட்-19 வரைஸ் தொற்றிற்கு ஆளாகாமல், மக்கள் தங்களின் அன்றாட பணிகளுக்கு செல்ல இருக்கும் வழிகளை என்னென்ன என்று அறிந்துகொள்ள, நோயெதிர்ப்பு நிபுணரும், உயிரியல் துறையில் துணை பேராசிரியராக பணியாற்றும் இரின் பிரோமேஜை என்ன சொல்லியிருக்கிறார்?

அமெரிக்காவில் இருக்கும் மாசச்சுவர்ட்ஸ் டார்ட்மௌத் பல்கலைக்கழகத்தில், கொள்ளை நோயியல் குறித்து கற்பிக்கிறார். இவர் தற்போது ஏற்பட்டுள்ள கொரோனா பரவலை கூர்ந்து கவனித்து வருகிறார்.

இந்த துறையில் வல்லுநர் என்பதையும் தாண்டி, இது குறித்த அறிவியல் சார்ந்த தரவுகளைப் பிறருக்கு எடுத்துரைக்கும் பொறுப்பு தனக்கு இருப்பதாக அவர் பார்க்கிறார்.

கொரோனா வைரஸ் அச்சுறுத்தல்கள் குறித்து அவர் தனது சமூகதளத்தில் எழுதிய கட்டுரை இதுவரை 1.6 கோடி முறை படிக்கப்பட்டுள்ளது. ஊரடங்குகளில் தளர்வுகள் ஏற்படுத்தப்பட்டு மக்கள் மீண்டும் வெளியே செல்லத்தொடங்கும் இந்த நிலையில், தங்களைப் பாதுகாப்பாக வைத்துக்கொள்ள என்னென்ன செய்ய வேண்டும் என்ற அவரின் அறிவுரைகளைப் பார்ப்போம்.

மக்களுக்கு நோய்த்தொற்று எங்கு ஏற்படுகிறது?

பெரும்பான்மையான மக்களுக்கு இந்த நோய், வீட்டில் உள்ள நபர்கள் மூலமாகவே பரவுவதாக அவர் கூறுகிறார். நோய்த்தொற்று ஏற்பட்ட ஒருவர், தன்னை அறியாமல் அதனோடு வீட்டிற்கு வரும்போது இவ்வாறு ஆகிறது என்கிறார்.

ஆனால், வீட்டிற்கு வெளியே நமது பாதுகாப்பு என்பது எப்படி உள்ளது? தினமும் நாம் நடைபயிற்சிக்காக செல்லும் பூங்காக்களில் நமக்கு பாதுகாப்பு இருக்குமா? மற்றவர்களைப்பற்றி சிந்திக்காமல், முகக்கவசம் அணியாமல் பூங்காவில் உடற்பயிற்சியில் ஈடுபடுவோர் மூலம் நமக்கு இந்த நோய் பரவ வாய்ப்புள்ளதா?

"பெரும்பாலும் அப்படி நடக்க வாய்ப்பு குறைவு" என்கிறார் பேராசிரியர் பிரோமேஜை. "பொதுவெளிகளில், நோய் கரைந்துபோக நிறைய வாய்ப்புள்ளது. சுவாசத்தை நீங்கள் வெளியே விடும்போது, அது மிக்குறைந்த அளவுகளாக சிதரிப் போய்விடுகின்றன."

ஆக, இந்த வரைஸ் உங்களில் உடலை தாக்குவதற்கு தேவையான நேரம் வரையில் நீங்கள் அந்த ஒரே இடத்தில் நிற்கமட்டீர்கள்.

"ஒரு வரைஸ் மூலமாக உங்களின் உடலில் தொற்று ஏற்பட வேண்டுமென்றால், அது குறிப்பிட்ட அளவில் உங்களின் உடலை வந்து சேர வேண்டும். மெர்ஸ் மற்றும் சார்ஸ் வைரஸ் தொற்று ஏற்படுத்திய தாக்கத்தை வைத்து கணக்கிட்டதில் சார்ஸ் வைரஸின் 1,000 வரைஸ் துகள்கள் இருந்தால், ஒருவருக்கு நோய் தொற்று ஏற்படுத்த முடியும் என கணக்கிடப்பட்டுள்ளது." என தனது கட்டுரையில் இவர் குறிப்பிட்டுள்ளார்.

இந்த குறிப்பிட்ட எண்ணிக்கை என்பது, நிச்சயம் விவாதத்திற்கு உட்பட்ட ஒன்றுதான். இவற்றை பரிசோதனைகள் மூலம் தீர்மானிக்கும் அவசியம் இல்லை என்றாலும், ஒரு நோய்தொற்று எவ்வாறு ஏற்படுகிறது என்பதை அறிந்துகொள்ள தேவையான தகவல்களை இவை அளிக்கின்றன.

"இதில் முக்கியமான விஷயம் என்னவென்றால், இந்த 1000 வைரஸ் துகள்களை நீங்கள் எப்படி நுகர்ந்தாலும் உங்களுக்கு நோய்த்தொற்று ஏற்படும். அது ஒரே நேரத்தில் நீங்கள் 1000 வைரஸ் துகள்களை சுவாசத்தின் மூலமாக உள்ளிழுத்துக்கொண்டதாக இருக்கலாம் அல்லது 100 துகள்களை 10முறை உள்ளிழுத்திருக்கலாம் அல்லது 10 துகள்களை 100 முறை இழுத்திருக்கலாம். எப்படியும் அது உங்களை தொற்றுவரை கொண்டு செல்லும்." என்கிறார் அவர்.





ஊரடங்கு முடியும் நேரத்தில் நீங்கள் பாதுகாப்பாக இருப்பது எப்படி?

0 Comments

    No Comments Here ..

Leave a comment

Post Comment





<

செய்திமடல்

ராசிப்பலன்கள்

கருத்துகணிப்பு