01,Jan 2026 (Thu)
  
CH
உலக செய்தி

ஹைட்ரொக்ஸி குளோரோகுயின் பாவிப்பதை தற்காலிகமாக தடை செய்தது உலக சுகாதார நிறுவனம்!

கொரோனா சிகிச்சைக்கு ஹைட்ரொக்ஸி குளோரோகுயின் பாதுகாப்பான சிகிச்சை முறையல்ல என தெரிவித்துள்ள உலக சுகாதார நிறுவனம், அதை கொரோனா சிகிச்சைக்கு பாவிப்பதை தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளதாக அறிவித்துள்ளது.

உலக சுகாதார நிறுவனத்தின் இயக்குநர் டெட்ரோஸ் அதானோம் கெப்ரேயஸ் நேற்று (25) ஜெனீவாவில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போது தெரிவித்தார்.

ஹைட்ரொக்ஸி குளோரோகுயின் மற்றும் குளோரோகுயினுடன் சிகிச்சையளிக்கப்பட்ட கோவிட் -19 நோயாளிகள் எவ்வளவு தீவிரமாக இறக்க நேரிடும் என்று த லான்செட் என்ற மருத்துவ இதழில் வெள்ளிக்கிழமை வெளியிடப்பட்ட ஒரு ஆய்வு முடிவின் பின்னர் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

ஹைட்ரொக்ஸி குளோரோகுயின் பயன்பாட்டை ஒரு சுயாதீன நிர்வாக குழு இப்போது ஆய்வு செய்து வருவதாக டெட்ரோஸ் கூறினார். விசாரணையில் 10 நாடுகளை சேர்ந்த குழுவினர் பங்கேற்றுள்ளனர்.

35 நாடுகளில் 400 க்கும் மேற்பட்ட மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்ட நோயாளிகளை உள்ளடக்கிய இந்த சோதனை, கோவிட் -19 க்கான பாதுகாப்பான மற்றும் பயனுள்ள சிகிச்சை முறைகளைக் கண்டறியும் உலகளாவிய ஆராய்ச்சி முயற்சியாகும் என தெரிவித்தார்.




ஹைட்ரொக்ஸி குளோரோகுயின் பாவிப்பதை தற்காலிகமாக தடை செய்தது உலக சுகாதார நிறுவனம்!

0 Comments

    No Comments Here ..

Leave a comment

Post Comment





<

செய்திமடல்

ராசிப்பலன்கள்

கருத்துகணிப்பு