டெல்லியில் மெட்ரோ ரயில் சேவையை ஆரம்பிப்பதற்கு குறைந்த பட்சம் இரண்டு நாட்களாவது அவகாசம் தேவை என கைலாஷ் கெலாட் தெரிவித்துள்ளார்.
டெல்லியில் ஊரடங்கு உத்தரவு படிபடியாக தளர்த்தப்பட்டு வருகின்றது. உள்நாட்டு விமான சேவைகளும் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. இந்நிலையில் மெட்ரோ ரயில் சேவையை ஆரம்பிக்குமாறு பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இது குறித்து கருத்து தெரிவிக்கையிலேயே கைலாஷ் கெலாட் மேற்படி அறிவித்துள்ளார். இது குறித்து மேலும் தெரிவித்த அவர், “டெல்லியில் மெட்ரோ ரயில் சேவையை தொடங்க வேண்டும் என்றே மாநில அரசு விருப்பம் தெரிவித்துள்ளது. ஆனால் இதுவரை எந்த தகவலும் மத்திய அரசிடம் இருந்து வரவில்லை.
எந்த உத்தரவு வந்தாலும் அதனை ஏற்று மெட்ரோ ரயில் சேவையை தொடங்க அனைத்து ஏற்பாடுகளும் செய்து வருகிறோம். மெட்ரோ ரயில் சேவையை தொடங்க டெல்லி மெட்ரோ ரயில் நிறுவனத்திற்கு குறைந்தபட்சம் தயாராக 2 நாட்களாவது அவகாசம் தேவை” எனத் தெரிவித்துள்ளார்.
0 Comments
No Comments Here ..