06,May 2024 (Mon)
  
CH
உலக செய்தி

அடுத்த தலைமுறையை காக்க இதனை செய்யுங்கள்

நம் தினசரி வாழ்க்கையில் சில மாற்றங்களை ஏற்றுக்கொள்ள தயாராக இருந்தால் மட்டுமே, காலநிலை மாற்றத்தைக் கட்டுக்குள் கொண்டுவந்து சமாளிக்க முடியும் என ஆய்வு ஒன்று கூறுகிறது.

காற்றில் கலந்துள்ள கரியமில வாயுவை குறைக்க பல சிறந்த வழிகள் உள்ளன. அவை அனைத்தையும் ஆய்வாளர்கள் பட்டியலிட்டுள்ளனர்.

கொரோனா வைரஸ் பாதிப்பால் உலகம் முழுவதும் உள்ள மக்கள் எவ்விதமான தீவிர மாற்றத்தையும் ஏற்றுக்கொள்ள தயாராகிவிட்டனர் எனக் கூறப்படுகிறது.

எனவே தற்போது அரசாங்கங்கள் தான் நல்ல திட்டங்களையும் முயற்சிகளையும் மேற்கொள்ள வேண்டிய இடத்தில் உள்ளனர். உடனடியாக பூமியைக் காப்பாற்ற வேண்டும் என்பதே அனைவரின் முதல் கடமையாக மாற வேண்டும் என ஆராய்ச்சியாளர்கள் தங்கள் வாதத்தை முன்வைக்கின்றனர்.

மொத்தம் 7000 ஆராய்ச்சி முடிவுகளை மையமாக கொண்டு காற்றில் உள்ள கரியமில வாயுவின் அளவை குறைக்க ஆராய்ச்சியாளர்கள் சில சிறந்த வழிகளைப் பரிந்துரைக்கின்றனர். அவை என்னென்ன ? காற்றில் உள்ள கரியமில வாயுவின் அளவை குறைக்க கார்கள் பயன்படுத்துவதை நிறுத்த வேண்டும் என ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர். ஆண்டிற்கு ஒருவர் கார் பயன்படுத்துவதை தவிர்த்தாலும் சுமார் 2.04 டன் கரியமில வாயுவை தவிர்க்க முடியும் என ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர்.

மேலும் ஓரு மின்சார பாட்டரி கார் பயன்படுத்துவது மூலமாகவும் 1.95 டன் கரியமில வாயு வெளியாகிறது என ஆய்வுகள் குறிப்பிடுகிறது.

ஒவ்வொரு ஆண்டும் விமானம் மூலம் நாம் மேற்கொள்ளும் குறைந்த தூர பயணத்தையாவது தவிர்க்க வேண்டும்.

சுற்றுச்சூழலில் உள்ள கரியமில வாயுவின் அளவை குறைக்க நாம் அசைவ உணவை தவிர்க்க வேண்டும். சைவமாக மாற வேண்டும். ஆனால் கார்களை தவிர்த்தால் குறைக்கப்படும் கரியமில வாயுவின் அளவை விட அசைவ உணவை தவிர்ப்பதன் மூலம் குறைக்கப்படும் கரியமில வாயுவின் அளவு மிகவும் குறைவு. ஆனால் சைவ உணவை மட்டுமே உட்கொள்வதும் கரியமில வாயுவின் அளவை குறைக்க சிறந்த வழி என ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர்.

இந்த பூமி தங்கிக்கொள்ளும் அளவில் மட்டுமே தினசரி கரியமில வாயு வெளியேற்றப்பட வேண்டும் என அனைவரும் முடிவு செய்யவேண்டும். அதற்கேற்ப கார் பயன்பாடு மற்றும் உணவு பழக்க வழக்கங்களை மாற்றிக்கொள்ள வேண்டும்

சர்ச்சைக்குரிய மற்றும் விலை மதிப்பு அதிகம் உள்ள தொழில்நுட்பங்களைத் தவிர்த்து விட்டு சில எளிய வழிகளில் காற்றில் உள்ள கரியமில வாயு அளவை குறைக்க முடியும் என்கிறார் டயானா.

பொது போக்குவரத்து, நடந்து செல்லுதல், சைக்கிள் ஓட்டுதல் என அனைத்திற்கும் தடை விதிக்கப்பட்டுள்ள நிலையில் மக்கள் வாகனங்களையும் பயன்படுத்தாமல் இருக்கிறார்கள் என்பதை கொரோனா ஊரடங்கு உத்தரவு நமக்கு உணர்த்தியுள்ளது என்கிறார் டயானா.

மேலும் அதிக வருமானம் ஈட்டும் செல்வந்தர்களே ஆண்டுக்குப் பல முறை விமான பயணம் மேற்கொள்கின்றனர். விலை உயர்ந்த கார்களை வாங்குகின்றனர் என டயானாவின் ஆராய்ச்சி முடிவுகள் விவரிக்கின்றன

உலகமே காலநிலை மாற்றத்தால் பாதிக்கப்பட்டுள்ளது. ஆனால் இங்கு வாழும் சாதாரண எளிய மனிதன் அதிகமாக விமானத்தில் பறப்பதில்லை. ஒரு குறிப்பிட்ட வர்கத்தினர் மட்டுமே விமான பயணம் மேற்கொள்கின்றனர். விமான பயணத்திற்கு வரி வசூலிக்கப்பட்டாலும் இது ஒரு தார்மீக பிரச்சனை.

ஆறாவது காரணமாக ஒவ்வொருவரின் வீட்டிலிருந்தும் வெளியேற்றப்படும் கரியமில வாயுவை தடுக்க வேண்டும். ஒவ்வொரு வீட்டிலிருந்தும் 0.895 டன் கரியமில வாயு வெளியேற்றப்படுகிறது.

ஏழாவது ஆக சைவ உணவுக்குமாறவேண்டும். இதன் மூலம் 0.8 டன் கரியமில வாயுவை குறைக்கலாம்.

வளர்ந்த நாடுகளில் பயன்படுத்தப்படும் மாசு ஏற்படும் சமையல் அடுப்புகளை தவிக்க வேண்டும். நவீன சமையல் அடுப்புகளால் கட்டடங்களே வெப்பம் அடைகின்றன.

இதுவரை குறிப்பிட்ட வழிமுறைகளையெல்லாம் ஒருவர் கடைப்பிடித்தால் கூட ஓர் ஆண்டுக்கு ஒருவர் மட்டும் 9 டன் கார்பன்டை ஆக்ஸைடு வெளியேறுவதைத் தடுக்க முடியும்.

தற்போதைய நிலவரப்படி இங்கிலாந்தில் உள்ள ஒரு வீட்டிலிருந்து 10 டன் கரியமில வாயு வெளியேற்றப்படுகிறது. அமெரிக்காவில் உள்ள ஒரு வீட்டிலிருந்து 17 டன் கரியமில வாயு வெளியேற்றப்படுகிறது.

சில பொருட்களை மறுசுழற்சி செய்வதை மட்டும் தவிர்த்துவிடக் கூடாது என கிரீன் அலையன்ஸ் திங்க் டாங்க்கை சேர்ந்த லிப்பி பிக்கே கூறுகிறார். மேலும் மறுசுழற்சி முறையினால் கழிவுகள் குவிந்து கிடப்பதை நம்மால் தவிர்க்க முடியும். எனவே கழிவுகளிலிருந்து வெளியேற்றப்படும் கரியமில வாயுவை தவிர்க்க மறு சுழற்சி முறையே சிறந்தது.






அடுத்த தலைமுறையை காக்க இதனை செய்யுங்கள்

0 Comments

    No Comments Here ..

Leave a comment

Post Comment





<

செய்திமடல்

ராசிப்பலன்கள்

கருத்துகணிப்பு