கொரோனா வைரஸ் கடுமையாக பாதிக்கப்பட்ட மத்திய கிழக்கு நாடுகளில் ஒன்றான ஈரானில் பெப்ரவரி 21 அம திகதி தேர்தல்களுக்குப் பின்னர் இன்று (புதன்கிழமை) கடுமையான சுகாதார வழிகாட்டுதல்கள் மற்றும் சமூக இடைவெளியுடன் நாடாளுமன்றம் ஆரம்பமானது.
இதன்போது அனைத்து உறுப்பினர்களுக்கும் வெப்பம் பரிசோதிக்கப்பட்டு, முக்காகவாசகங்கள் அணிந்தவரும் நாடாளுமன்றம் நுழைந்ததாக அந்நாட்டு ஊடங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
ஈரானில் 139,511 உறுதிப்படுத்தப்பட்ட கொரோனா நோயாளிகள் அடையாளம் காணப்பட்டுள்ள நிலையில் ஈரானில் இறந்தவர்களின் எண்ணிக்கை 7,508 ஐ எட்டியுள்ளதாக ஈரானின் சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.
இந்நிலையில் கொரோனா வைரஸிற்கு எதிர்ன போராட்டம் குறித்து கருத்து தெரிவித்த அந்நாட்டு ஜனாதிபதி ஹசன் ரௌஹானி, இந்த ஆபத்தான வைரஸுக்கு எதிரான போராட்டத்தில் வெற்றி பெற்ற நாடுகளில் நாங்கள் ஒருவராக இருக்கிறோம் என கூறியுள்ளமை சுட்டிக்காட்டத்தக்கது.
0 Comments
No Comments Here ..