தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் 11 பிரமுகர்களை தனிமைப்படுத்த வேண்டுமென கோரி யாழ்ப்பாண காவல்துறையினர் தாக்கல் செய்த மனு, இன்று தள்ளுபடி செய்யப்பட்டது. 11 பேரும் வழக்கிலிருந்து விடுவிக்கப்பட்டனர்.
யாழ் நீதிவன் நீதிமன்றத்தில் இன்று வழக்கு விசாரணைக்கு எடுக்கப்பட்டபோது, நீதிவான் இந்த உத்தரவை இட்டார்.
முள்ளிவாய்க்கால் நினைவேந்தலை தமிழ் தேசிய மக்கள் முன்னணி அனுட்டிக்க தடை கோரியும், முன்னணியின் 11 உறுப்பினர்களை தனிமைப்படுத்தவும் கோரி, கடந்த 17ஆம் திகதி யாழ்ப்பாணம் காவல்துறையினர் மன்றிடம் அனுமதி பெற்றிருந்தனர்.
இந்த உத்தரவிற்கு எதிராக மறுநாள் முன்னணியின் 11 பிரமுகர்கள் சார்பில் நகர்த்தல் பத்திரம் தாக்கல் செய்யப்பட்டு, முன்னைய உத்தரவு மீளப்பெறப்பட்டிருந்தது. இந்த நிலையில், வழக்கு இன்று மீளவும் விசாரணைக்கு எடுக்கப்பட்டது.
இதன்போது இரு தரப்பு சமர்ப்பணங்களையும் கேட்ட நீதிமன்றம், வழக்கை தொடர்ந்து முன்னெடுக்க தேவையில்லையென குறிப்பிட்டு, வழக்கை தள்ளுபடி செய்தது.













0 Comments
No Comments Here ..