07,Feb 2026 (Sat)
  
CH

செம்மணி மனித புதைகுழி அகழ்வாராய்ச்சி: டி. ராஜேந்தர் உருக்கம்

யாழ்ப்பாணம், செம்மணி சித்துப்பாத்தி மனித புதைகுழியில் தொடர்ந்து என்புக்கூடுகள் மீட்கப்பட்டு வருவது குறித்து தென்னிந்திய இயக்குநரும், நடிகரும், இசையமைப்பாளருமான டி. ராஜேந்தர் உருக்கமான கருத்துக்களைத் தெரிவித்துள்ளார்.


அவர் தனது அறிக்கையில், "இராணுவத்தின் கட்டுப்பாட்டிலிருந்த அந்தப் பகுதியில் இராணுவத்தின் வெறியாட்டத்தையும், அந்த ஓநாய்களினுடைய களியாட்டத்தையும், மயானத்தில் அவர்கள் ஆடிய ஆட்டத்தையும், தமிழர்கள் மீது அவர்கள் கொண்ட காட்டத்தையும் சர்வதேச உலகம் தெரிந்துகொள்ள வேண்டும்" என்று வலியுறுத்தினார்.


மேலும், "இந்தப் புதைகுழிக்குள்ளே இத்தனை உடல்கள் மீட்கப்படுகின்றன. தோண்டத் தோண்ட என்புக்கூடுகள் வந்து கொண்டே இருக்கின்றன. இதைப் பார்க்கும்போது தமிழர்களாகிய எமது நெஞ்சம் பதைபதைக்கிறது" என்று டி. ராஜேந்தர் கூறினார்.


"மயானத்திலே பிணங்கள் எரிக்கப்பட்டால் அதுதான் வெந்து கொண்டிருக்கும். ஆனால் எங்களுடைய தமிழினத்தின் அந்த என்புக்கூடுகளை இவர்கள் தோண்டி எடுக்கின்ற போது எங்களுடைய நெஞ்சம் வெந்து கொண்டிருக்கின்றது. சேயைக் கட்டி அணைத்த வண்ணம் தாயைக் கண்டெடுத்திருக்கிறார்கள். புத்தகப் பையை ஏந்தி பிடித்த சிறுவனைக் கொன்று குவித்திருக்கிறார்கள். உயிரோடு வைத்துப் புதைத்திருக்கிறார்களே நெஞ்சம் பதை பதைக்கிறது" என அவர் தனது ஆதங்கத்தை வெளிப்படுத்தினார்.


இறுதியாக, "இதை எல்லாம் பார்க்கின்ற போது சர்வதேச அளவிலே எமது மக்களுக்கு ஒரு நீதி கிடைக்க வேண்டும். அந்த நீதிக்காகத் தமிழர்கள் ஒவ்வொருவரும் நாங்கள் தொப்புள் கொடி உறவுகளாகக் குரல் கொடுத்துக்கொண்டே இருப்போம்" என்று நடிகர் டி. ராஜேந்தர் உறுதியளித்தார்.




செம்மணி மனித புதைகுழி அகழ்வாராய்ச்சி: டி. ராஜேந்தர் உருக்கம்

0 Comments

    No Comments Here ..

Leave a comment

Post Comment





<

செய்திமடல்

ராசிப்பலன்கள்

கருத்துகணிப்பு