சர்ச்சைக்குரிய 323 கொள்கலன்கள் விடுவிக்கப்பட்ட விவகாரம் தொடர்பாக எழுப்பப்பட்ட குற்றச்சாட்டுகளை விசாரிக்க நியமிக்கப்பட்ட குழுவின் அறிக்கை எதிர்காலத்தில் நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படும் என பொருளாதார அபிவிருத்தி பிரதி அமைச்சர் கலாநிதி அனில் ஜயந்த தெரிவித்துள்ளார்.
இன்றையதினம் (ஜூலை 08) நடைபெற்ற அமர்வில் கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனைக் குறிப்பிட்டார்.
பிரதி அமைச்சர் மேலும் தெரிவிக்கையில், விடுவிக்கப்பட்ட கொள்கலன்கள் குறித்து குற்றப் புலனாய்வுத் திணைக்களம் (CID) ஏற்கனவே விசாரணையை ஆரம்பித்துள்ளதாகவும் தெரிவித்தார்.
கொள்கலன்களை விடுவிப்பது தொடர்பாக எந்த அரசியல் தலையீடும் அல்லது அரசியல் தேவையும் இல்லை என்று குறிப்பிட்ட பிரதி அமைச்சர், முன்வைக்கப்பட்ட குற்றச்சாட்டுகள் தொடர்பாக துல்லியமான பதில்களைப் பெறுவதற்காக எதிர்காலத்தில் குழுவின் அறிக்கையை நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்க எதிர்பார்ப்பதாகவும் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
0 Comments
No Comments Here ..