யாழ்ப்பாணம், செம்மணி - சித்துபாத்தி மனிதப் புதைகுழியில் 13 ஆவது நாளாக நேற்று அகழ்வு பணிகள் முன்னெடுக்கப்பட்டன.
வளாகத்தில் மனித எச்சங்கள் காணப்படலாம் என்று சந்தேகத்துக்குரிய இடமாக அடையாளப்படுத்தப்பட்ட பகுதி, அகழ்வுக்குரிய இரண்டாவது இடமாக நேற்றைய தினம் நீதிமன்றினால் பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது.
இதன்படி, குறித்த பகுதியில் 3 மனித என்புக்கூட்டுத் தொகுதிகள் அடையாளம் காணப்பட்டதுடன், நேற்றைய தினம் மொத்தமாக 4 என்புக்கூட்டுத் தொகுதிகள் அடையாளம் காணப்பட்டன.
இதுவரையில் மொத்தமாக 56 மனித என்புக்கூட்டுத் தொகுதிகள் அடையாளம் காணப்பட்டுள்ளதாகப் பாதிக்கப்பட்டோர் தரப்பு சட்டத்தரணியான ரணிதா ஞானராஜ் ஊடகங்களுக்குத் தெரிவித்துள்ளார்.
அவற்றில் 50 மனித என்புக்கூட்டுத் தொகுதிகள் அகழ்ந்தெடுக்கப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
0 Comments
No Comments Here ..