09,May 2024 (Thu)
  
CH
ஆன்மிகம்

இன்றைய ராசிபலன்

மேஷம்

  • மேஷம்: குடும்பத்தில் உள்ளவர்களின் உணர்வுகளுக்கு மதிப்பளிப்பீர்கள். பழைய கடன் பிரச்சினைகள் கட்டுப்பாட்டுக்குள் வரும். நம்பிக்கைக்கு உரியவரை கலந்து ஆலோசித்து சில முடிவுகளை எடுப்பீர்கள். வியாபாரத்தில் வேலையாட்கள் கடமையுணர்வுடன் செயல்படுவார்கள். உத்தியோகத்தில் பாராட்டப்படுவீர்கள். சிறப்பான நாள்.

ரிஷபம்

  • ரிஷபம்: கடந்த கால இனிய அனுபவங்களை நினைவு கூர்ந்து மகிழ்வீர்கள். விருந்தினர்களின் வருகையால் வீடு களை கட்டும். வாகன வசதிப் பெருகும். வியாபாரத்தில் விஐபிகள் வாடிக்கையாளர்கள் ஆவார்கள். உத்தியோகத்தில் சக ஊழியர்களின் ஆதரவால் நினைத்ததை முடிப்பீர்கள். சாதிக்கும் நாள்.

மிதுனம்

  • மிதுனம்: கணவன்-மனைவிக்குள் மனம் விட்டு பேசுவீர்கள். கேட்டஇடத்தில் பணம் கிடைக்கும். புதியவரின் நட்பால் உற்சாகமடைவீர்கள். வீடு வாகனத்தை சீர் செய்வீர்கள். வியாபாரத்தில் புது ஒப்பந்தம் கையெழுத்தாகும். உத்தியோகத்தில் இழந்த உரிமையை பெறுவீர்கள். திட்டங்கள் நிறைவேறும் நாள்.

கடகம்

  • கடகம்: சந்திராஷ்டமம் தொடர்வதால் அநாவசிய பேச்சை தவிர்ப்பது நல்லது. சந்தேகப் புத்தியால் நல்லவர்களை இழக்கவேண்டி வரும் மற்றவர்களுக்குஉதவி செய்யப் போய் உபத்திரவத்தில் சிக்கி கொள்ளாதீர்கள். வியாபாரத்தில் லாபம் அதிகரிக்கும். உத்தியோகத்தில் சின்ன இடர்பாடுகளை சமாளிக்க வேண்டியிருக்கும். போராடி வெல்லும் நாள்.

சிம்மம்

  • சிம்மம்: கணவன்-மனைவிக்குள் ஆரோக்கியமான விவாதங்கள் வந்து போகும். மனைவி வழியில் அந்தஸ்து உயரும். கல்யாணப் பேச்சு வார்த்தை சாதகமாக முடியும். வாகனத்தை சீர் செய்வீர்கள். வேற்றுமதத்தவர் உதவுவார். வியாபாரத்தில் புது வாடிக்கையாளர்கள் அறிமுகமாவார்கள். உத்தியோகத்தில் மேலதிகாரி மதிப்பார். தன்னம்பிக்கை துளிர்விடும் நாள் .

கன்னி

  • கன்னி: குடும்பத்தாரின் விருப்பங்களை நிறைவேற்றுவீர்கள். அரசால் அனுகூலம் உண்டு. வழக்கில் சாதகமான தீர்ப்பு வரும். வியாபாரத்தில் புது யுக்திகளை கையாண்டு வெற்றி பெறுவீர்கள். உத்தியோகத்தில் அதிகாரிகள் உங்களுக்கு முன்னுரிமை தருவார்கள். தொட்டது துலங்கும் நாள்.

துலாம்

  • துலாம்: புதிய திட்டங்கள் நிறைவேறும். பிள்ளைகளின் உயர் கல்வி,உத்தியோகம் குறித்து யோசிப்பீர்கள். அக்கம்-பக்கம் வீட்டாரின் அன்புத் தொல்லை குறையும். வியாபாரத்தில் வாடிக்கையாளர்களின் எண்ணிக்கை அதிகரிக்கும். உத்தியோகத்தில் புதிய சலுகைகள் கிடைக்கும். கனவு நனவாகும் நாள்.

விருச்சிகம்

  • விருச்சிகம்: முக்கிய பிரமுகர்களை சந்திப்பீர்கள். தாய்வழி உறவினர்களால் வீண் செலவுகள் ஏற்படும். வெளிவட்டாரத் தொடர்புகள் அதிகரிக்கும். புதிய நண்பர்கள் உதவுவார்கள். வியாபாரத்தில் சூழ்ச்சிகளை முறியடிப்பீர்கள். உத்தியோகத்தில் சக ஊழியர்கள் ஒத்துழைப்பார்கள். உழைப்பால் உயரும் நாள்.

தனுசு

  • தனுசு: திட்டவட்டமாக சில முக்கிய முடிவுகள் எடுப்பதில் அதிக அக்கறை காட்டுவீர்கள். அரசால் ஆதாயம் உண்டு. புது வாகனம் வாங்குவீர்கள். அதிரடியான திட்டங்களை தீட்டுவீர்கள். வியாபாரத்தில் புதிய பங்குதாரர்கள் வருவார்கள். உத்தியோகத்தில் உங்கள் கருத்துக்கு ஆதரவு பெருகும். நினைத்ததை முடிக்கும் நாள்.

மகரம்

  • மகரம்: குடும்பத்தில் சந்தோஷம் நிலைக்கும். நவீன சாதனங்களை வாங்கி மகிழ்வீர்கள். உறவினர்கள் ஒத்தாசையாக இருப்பார்கள். பாதியில் நின்ற வேலைகள் விரைந்துமுடியும். வியாபாரத்தில் வேலையாட்கள் மதிப்பார்கள். உத்தியோகத்தில் பணிகளை விரைந்து முடிப்பீர்கள். புத்துணர்ச்சி பெருகும் நாள்.

கும்பம்

  • கும்பம்: ராசிக்குள் சந்திரன் இருப்பதால் வேலைச்சுமையால் உடல் அசதி, சோர்வு வந்து நீங்கும். சிலர் உங்களை தாழ்த்திப் பேசினாலும் கலங்காதீர்கள். வியாபாரத்தில் வாடிக்கையாளர்கள் அதிருப்தி அடைவார்கள். உத்தியோகத்தில் சக ஊழியர்களுடன் பனிப்
  • போர் வந்து நீங்கும். வளைந்து கொடுத்து செல்லவேண்டிய நாள்.

மீனம்

  • மீனம்: குடும்பத்தைப் பற்றிய கவலைகள் வந்து நீங்கும். வாகனம் அடிக்கடி செலவு வைக்கும். யாருக்கும் சாட்சிகையெழுத்திட வேண் டாம்.வியாபாரத்தில் வேலையாட்களை அனுசரித்துப் போங்கள். உத்தியோகத்தில் ஊழியர்களால் பிரச்சினைகள் வந்து நிற்கும். கவனம் தேவைப்படும் நாள்.





இன்றைய ராசிபலன்

0 Comments

    No Comments Here ..

Leave a comment

Post Comment





<

செய்திமடல்

ராசிப்பலன்கள்

கருத்துகணிப்பு