11,May 2024 (Sat)
  
CH
இந்திய செய்தி

இதுவரை இல்லாத அளவில் 11,458 பேருக்கு கொரோனா தொற்று

இந்தியாவில் கடந்த 24 மணிநேரத்தில் இதுவரை இல்லாத அளவில் 11,458 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

இந்தியாவில் கரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. குறிப்பாக மகாராஷ்டிரம், தமிழ்நாடு, தில்லி ஆகிய 3 மாநிலங்களில் தான் கொரோனா பாதிப்பு உச்சத்தை தொட்டு வருகிறது. இதனால் கொரோனா தொற்று சமூக பரவலாகிவிட்டதா என்ற கேள்வி பொதுமக்களிடையே எழுந்துள்ளது. ஆனால் மத்திய அரசு இதனை திட்டவட்டமாக மறுத்துள்ளது.

இந்த நிலையில் இந்தியாவில் கடந்த 24 மணிநேரத்தில் இதுவரை இல்லாத அளவில் 11,458 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் வெளியிட்ட தகவலில், நாடு முழுவதும் வெள்ளிக்கிழமை காலை வரையிலான 24 மணிநேரத்தில் 11,458 பேருக்கு கொரோனா நோய்த்தொற்று உறுதி செய்யப்பட்டது.

இதைத் தொடா்ந்து, மொத்த பாதிப்பு எண்ணிக்கை 308,993 ஆக அதிகரித்துள்ளது. மேலும் கொரோனா கடந்த 24 மணிநேரத்தில் 386 போ் உயிரிழந்தனா். இதை அடுத்து, மொத்த பலி எண்ணிக்கை 8,884 ஆக உயா்ந்துள்ளது. இதுவரை பாதிக்கப்பட்டோரில் 145,779 போ் சிகிச்சையில் உள்ளனா். 154,330 போ் நோய்த்தொற்றில் இருந்து குணமடைந்தனா். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்தியாவில் அதிகபட்சமாக மகாராஷ்டிர மாநிலத்தில் 101,141 பேர் கொரோனா பாதிக்கப்பட்டுள்ள நிலையில் 3,717 பேர் பலியாகியுள்ளனர். இந்தியாவில் ஒரே நாளில் 10,000 க்கும் மேற்பட்டோருக்கு நோய்த்தொற்று கண்டறியப்படுவது இது 2 ஆவது முறையாகும். முன்னதாக நேற்று ஒரே நாளில் அதிகபட்சமாக 10,956 பேருக்கு கொரோனா நோய்த்தொற்று உறுதி செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.




இதுவரை இல்லாத அளவில் 11,458 பேருக்கு கொரோனா தொற்று

0 Comments

    No Comments Here ..

Leave a comment

Post Comment





<

செய்திமடல்

ராசிப்பலன்கள்

கருத்துகணிப்பு