05,May 2024 (Sun)
  
CH
உலக செய்தி

மணப்பெண்ணுக்கு மணமகன் கொடுத்த வரதட்சணை

இந்தோனேசியாவில் தனது வளர்ப்பு மகளை 65 வயதான பெண் திருமணம் செய்து கொண்டுள்ளார்.

Mbah Gambreng (65) என்ற பெண் கடந்தாண்டு Ardi Waras (24) என்ற இளைஞனை தத்தெடுத்து கொண்டார். Mbah ஏற்கனவே மூன்று இளம்பெண்களை தனது மகள்களாக தத்தெடுத்துள்ளார்.

இந்த சூழலில் வளர்ப்பு மகன் Ardi-ஐ Mbah சமீபத்தில் திருமணம் செய்து கொண்டுள்ளார்.

இது குறித்து Mbah கூறுகையில், எனக்கு முதலில் Ardi-ஐ திருமணம் செய்ய வேண்டும் என்ற எண்ணம் இல்லை.

நான் அவரிடம் நீ விரைவில் திருமணம் செய்து கொள்ள வேண்டும் என கூறினேன், அதற்கு அவர் நாம் இருவரும் திருமணம் செய்து கொள்வோமா என என்னிடம் காதலை சொன்னார்.

இதையடுத்தே நாங்கள் மணந்து கொண்டோம் என கூறியுள்ளார்.

இந்தோனேசிய இஸ்லாமிய திருமணத்தின் வழக்கப்படி மணமகன் மணப்பெண்ணுக்கு வரதட்சணை கொடுக்க வேண்டும்.

அதன்படி Mbah-வுக்கு Ardi 100,000 IDR (இலங்கை ரூபாய் மதிப்பில் 1,312.03) வரதட்சணையாக கொடுத்திருக்கிறார்.

இந்தோனேசியாவில் இது போன்ற அதிக வயது வித்தியாசம் கொண்ட தம்பதிகள் திருமணம் செய்து கொள்வது இது முதல் முறையல்ல.

இந்தாண்டு தொடக்கத்தில் 100 வயதான நபர் 20களில் உள்ள பெண்ணை திருமணம் செய்து கொண்டது குறிப்பிடத்தக்கது.





மணப்பெண்ணுக்கு மணமகன் கொடுத்த வரதட்சணை

0 Comments

    No Comments Here ..

Leave a comment

Post Comment





<

செய்திமடல்

ராசிப்பலன்கள்

கருத்துகணிப்பு