18,May 2024 (Sat)
  
CH
இலங்கை செய்தி

இரண்டாம் நிலை, கொரோனா அச்சுறுத்தலை எதிர்க்கொள்ள முடியும் - ரணில் விக்கிரமசிங்க

இரண்டாம் நிலை, கொரோனா அச்சுறுத்தலை எதிர்க்கொள்ள முடியும் என நம்பிக்கை உள்ளதாக இலங்கையின் முன்னாள் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்தார்.

கொழும்பில் நேற்று (சனிக்கிழமை) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும்போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

குறித்த ஊடக சந்திப்பில் அவர் மேலும் கூறியுள்ளதாவது, “ஐக்கிய தேசியக் கட்சியின் கொழும்புக்கான பிரசார நடவடிக்கைகளை ஆரம்பித்துள்ளோம்.

இந்தச் செயற்பாட்டை, உரிய சுகாதார நடைமுறைகளை பின்பற்றி மேற்கொள்ள வேண்டும் என தீர்மானித்துள்ளோம். நாம் அனைத்து மக்களையும் மதிப்பவர்கள். அனைத்து மதங்களுக்கும் சம உரிமை வழங்குபவர்ககள்.

எனினும், இலங்கையில் பௌத்த மக்கள் அதிகமாக காணப்படுகிறார்கள். எனவே, இவ்வேளையில் ஒன்றைக் கூறிக்கொள்ள வேண்டும்.

கடந்த காலத்தை எடுத்துக் கொண்டால், கொரோனாவால் குறைந்த அளவு பாதிப்பை எதிர்நோக்கியுள்ள நாடுகளாக பௌத்த சமயத்தை பின்பற்றும் நாடுகளே காணப்படுகின்றன.

அந்தவகையில், வியட்நாம், லாவோஸ், கம்மோடியா, இலங்கை, தாய்லாந்து, பூட்டான் போன்ற நாடுகளில் பாதிப்பு குறைவாகவே காணப்படுகின்றது. மீண்டும் கொரோனா வைரஸ் பரவாது என்றே கருதுகிறோம்.

ஆனால், துரதிஸ்டவதமான இரண்டாம் சுற்று அபாயம் ஏற்பட்டால் கூட, எமது தர்மசக்தியின் ஊடாக அதனை வெற்றிக் கொள்ள முடியும் என்றே நாம் கருதுகிறோம்” என குறிப்பிட்டுள்ளார்.




இரண்டாம் நிலை, கொரோனா அச்சுறுத்தலை எதிர்க்கொள்ள முடியும் - ரணில் விக்கிரமசிங்க

0 Comments

    No Comments Here ..

Leave a comment

Post Comment





<

செய்திமடல்

ராசிப்பலன்கள்

கருத்துகணிப்பு