இந்திய சினிமாவில் இன்னும் விடை காண முடியாமல் இருக்கிறது பல நடிகர், நடிகைகளின் தற்கொலைகள். சினிமாவில், ஒவ்வொரு தற்கொலைக்குப் பின்னும், இதுதான், அதுதான் என காரணங்கள் கூறப்பட்டாலும் உண்மையான காரணம் என்பது இறந்துபோனவர்களுக்கு மட்டுமே வெளிச்சம்
சிலர் கடிதம் எழுதி வைத்துவிட்டு தற்கொலை செய்திருக்கிறார்கள். இந்திய சினிமாவில் பல விடை தெரியாத தற்கொலைகள் நடந்திருக்கின்றன.
இயக்குனர் குருதத் அந்த தற்கொலை கிளைமாக்ஸ் இன்னும் மர்மமாகவே இருக்கிறது. இந்தி சினிமாவில் இளம் இயக்குனராக இருந்த குருதத், பாலிவுட்டுக்கு அருமையான சில படங்களைத் தந்தவர். காகாஸ் கே பூ, பாஸி, பியாசா ஆகிய படங்களின் வழியே இன்னும் பேசிக் கொண்டிருக்கிறவர். 1964 ஆம் ஆண்டு அப்போதை பாம்பேயில் தனது வாடகை வீட்டில் உயிரிழந்து கிடந்தார், சடலமாக.
தற்கொலையா? அப்போது அந்த இயக்குனர், நடிகர், தயாரிப்பாளருக்கு வயது 39. ஆல்ஹகாலும், தூக்க மாத்திரையும் ஓவர் டோஸ் ஆனதால் அவர் இறந்ததாகக் கூறப்படுகிறது. இது தற்கொலையா அல்லது எதிர்பாராமல் நடந்த விபத்தா என்பது இப்போது வரை தெரியவில்லை. ஆனால், இது ஒரு விபத்துதான் என்றார் குருதத்தின் மகன் அருண் தத்.
தேசிய விருது ஷோபா தமிழ் நடிகை, மகாலட்சுமி மேனன் என்று சொன்னால், நிச்சயம் உங்களுக்கு யாரென்று தெரியாது. ஆனால், அவரது ஸ்கீரீன் பெயரான ஷோபா என்றால், ஆஹா என்பீர்கள். நிழல் நிஜமாகிறது, முள்ளும் மலரும், பசி, அழியாத கோலங்கள், மூடுபனி என அவர் நடித்த படங்கள், அழகாலும் நடிப்பாலும் நிரம்பி இருக்கிறது. 'பசி' படத்துக்காக தேசிய விருது பெற்ற ஷோபா, கடந்த 1980 ஆம் ஆண்டு மே 1 ஆம் தேதி சடலமாக கிடந்தார் தனது சென்னை வீட்டில்.
காரணம் தெரியவில்லை அப்போது அந்த நடிகைக்கு வயது 17. அதற்குள் அவர் சில படங்களில் ஹீரோயினாக நடித்து முடிந்திருந்தார். அவர் ஏன் தற்கொலை செய்துகொண்டார் என்பது இப்போதுவரை புதிராகவே இருக்கிறது. அவர் தற்கொலை செய்துகொண்ட சில வருடங்களிலேயே அவர் அம்மாவும் தற்கொலை செய்துகொண்டார். இதற்கும் காரணம் தெரியவில்லை
நடிகை சில்க் ஸ்மிதா நடிகைகள் தற்கொலை லிஸ்டில் இருக்கும் இன்னொரு பிரபல நடிகை விஜயலட்சுமி. அதாவது சில்க் ஸ்மிதா. வண்டிச்சக்கரம், மூன்று முகம் என்று படங்களில் மிரட்டிய சில்க், 1996 ஆம் ஆண்டு தனது 33 வயதில் தற்கொலை செய்துகொண்டார். இந்த தற்கொலைக்கு என்ன காரணமாக இருந்திருக்கும் என்கிற அவரது ரசிகர்களின் கேள்விகள் இன்னும் அப்படியே இருக்கிறது
நடிகை ஜியா கான் காதலர் தினம் படத்தில் நடித்த குணால், கோழி கூவுது விஜி, சிம்ரன் தங்கை நடிகை மோனல், என தொடரும் தற்கொலைகளில், நிசப்த், கஜினி ரீமேக் உட்பட சில படங்களில் நடித்த ஜியா கானின் தற்கொலை 2013 ஆம் ஆண்டு பரபரப்பாகப் பேசப்பட்டது. இதே போல இன்னும் பல பிரபலங்களின் தற்கொலைக்கு விடை கிடைக்கவில்லை. இப்போது சுஷாந்த் சிங் ராஜ்புத் இந்த லிஸ்டில் இணைந்திருக்கிறார். இந்த பாதை இன்னும் எதுவரை செல்லுமோ?
0 Comments
No Comments Here ..