28,Apr 2024 (Sun)
  
CH
உலக செய்தி

உலகின் கடைசி நாள் ஜூன் 21-ம் திகதி

எதிர்வரும் 21ம் திகதியுடன் உலகம் அழிந்துவிடும் என்று மாயன் கலண்டர் கணித்திருப்பது சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது.

மாயன் இனத்தவர்கள் வாழ்ந்த காலத்தில் உருவாக்கிய நாட்காட்டி வரும் ஜூன் 21-ம் திகதியுடன் நிறைவடைவதால், அன்றைய தினம் உலகம் அழிந்துவிடும் என்ற தகவல் சமூக ஊடகங்களில் மீண்டும் பரபரப்பை எட்டியுள்ளது.

உலகம் முழுவதும் தற்போது கிரிகோரியன் கலண்டர் முறையைத்தான் பயன்படுத்தி வருகிறார்கள். 1582-ம் ஆண்டுக்கு முன் இந்த கலண்டர் பரவலாகப் பயன்பாட்டுக்கு வரும் முன் உலகில் பல்வேறு வகையான கலண்டர்கள் காலத்தைக் குறிக்க மக்கள் பயன்படுத்தியுள்ளனர். அதில் முக்கியமானது மாயன் கலண்டர், ஜூலியன் கலண்டர்.

சூரியனை பூமி சுற்றிவரும் காலத்தை அடிப்படை வைத்து கிரிகோரியன் கலண்டர் வடிவமைக்கப்பட்டது. இதைத்தான் அறிவியல் வல்லுநர்களும் அறிவியல்பூர்வமானது என ஏற்றுக்கொண்டுள்ளனர்.

மாயன் கலண்டர் குறிப்பிட்டுள்ளபடி 2012, டிசம்பர் 21-ம் திகதி கடைசி நாளாகும். ஜூலியன் கலண்டர் கோட்பாட்டின்படி கணக்கில் வரும் 21-ம் திகதிதான் மாயன் கலண்டர் குறிப்பிட்ட 2012, டிசம்பர் 21-ம் திகதியாகும். இதனால் மாயன் கலண்டர் குறிப்பிட்டுள்ளபடி உலகின் கடைசி நாள் ஜூன் 21-ம் திகதியா என சமூக ஊடகங்களில் விவாதிக்கப்பட்டு வருகிறது.

2012ம் ஆண்டில் மாயன் கலண்டரின் படி உலகம் அழிந்துவிடும் என்று கூறினர். ஆனால் அவ்வாறு எதுவும் நடக்கவில்லை.ஏனெனில் இவை அனைத்திற்கும் அறிவியல் பூர்வமான ஆதாரங்கள் ஏதுமில்லை.

தற்போது 2020ம் ஆண்டு உலகம் அழிந்துவிடும் என்று மீண்டும் தகவல்களை பரப்பிக் கொண்டிருக்கின்றனர். இதற்கும் ஆதாரங்கள் இல்லை. ஆகையால் மக்கள் பீதியடைய தேவையில்லை என நாசா விஞ்ஞானிகள் விளக்கமளித்துள்ளனர்.

எவ்வாறு ஜூன் 21ம் திகதி என துல்லியமாக கூறுகின்றார்கள் என பார்த்தோமானால்,

விஞ்ஞானி பாலோ டகாலோகுயின் ட்விட்டரில் பதிவிட்ட கருத்தில்,

“ஜூலியன் நாட்காட்டியை நாம் பின்பற்றும்போது அந்த கலண்டர்படி நாம் இப்போது 2012-ஆம் ஆண்டில்தான் இருக்கிறோம். ஜூலியன் நாட்காட்டியில் இருந்து கிரிகோரியன் நாட்காட்டிக்கு மாறும் ஆண்டு ஓராண்டில் 11 நாட்களைக் குறைத்துக் கணக்கிட்டுள்ளோம்.

அதாவது கடந்த 1752-ஆம் ஆண்டிலிருந்து உலகம் முழுவதும் கிரிகோரியன் நாட்காட்டி பயன்பாட்டுக்கு வந்தது. 2020 ஆம் ஆண்டிலிருந்து 1752 ஆம் ஆண்டைக் கழித்தால் ஏறக்குறைய 268 ஆண்டுகளாக நாம் 11 நாட்களைக் கணக்கிடவில்லை.

அப்படியென்றால் 11 x 268 பெருக்கினால் 2,948 நாட்களைச் சேர்க்க வேண்டும். 2,948 நாட்களை 365 நாளில் வகுத்தால் (365 நாட்கள் – ஓராண்டு) 8 ஆண்டுகள் கிடைக்கிறது. அதாவது 8 ஆண்டுகளை நாம் கணக்கிடவில்லை. அதாவது தற்போது இருக்கும் 2020-ஆம் ஆண்டிலிருந்து 8 ஆண்டுகளைக் கழித்தால் 2012-ஆம் ஆண்டு. ஜூலியன் நாட்காட்டி படி நாம் தற்போது 2012-ஆம் ஆண்டில் இருக்கிறோம்” எனத் தெரிவித்தார்.




உலகின் கடைசி நாள் ஜூன் 21-ம் திகதி

0 Comments

    No Comments Here ..

Leave a comment

Post Comment





<

செய்திமடல்

ராசிப்பலன்கள்

கருத்துகணிப்பு