25,Aug 2025 (Mon)
  
CH

கரடி தாக்குதலுக்குள்ளான வயோதிபர் வைத்தியசாலையில் அனுமதி

திருகோணமலை – திரியாய் பகுதியில் கரடியின் தாக்குதலுக்குள்ளான வயோதிபரொருவர் திருகோணமலை பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரியவருகின்றது.

இந்த சம்பவம் இன்று பிற்பகல் ஒரு மணியளவில் இடம்பெற்றுள்ளது.

வீட்டிலிருந்து வயலுக்கு பின்புறமாக உள்ள காட்டுப் பகுதிக்குள் விறகு வெட்டுவதற்காக சென்று கொண்டிருந்த போது அந்த நபரை கரடி தாக்கியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இதனால் அவர் தலை மற்றும் கண் பகுதிகளில் படுகாயமடைந்த நிலையில் உடனடியாக குச்சவெளி பிரதேச வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு பின் மேலதிக சிகிச்சைக்காக திருகோணமலை பொது வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளதாக வைத்தியசாலை பேச்சாளரொருவர் தெரிவித்துள்ளார்.

குச்சவெளி – திரியாய் 6ஆம் வட்டாரத்தைச் சேர்ந்த ஐந்து பிள்ளைகளின் தந்தையான கந்தசாமி தனிகாசலம் (60 வயது) என்பவரே படுகாயமடைந்துள்ளதாகவும் தெரியவருகின்றது.

குறித்த நபரை சத்திரசிகிச்சைக்கு உட்படுத்த உள்ளதாகவும் திருகோணமலை பொது வைத்தியசாலையின் கடமை நேர வைத்திய அதிகாரி தெரிவித்துள்ளார்.




கரடி தாக்குதலுக்குள்ளான வயோதிபர் வைத்தியசாலையில் அனுமதி

0 Comments

    No Comments Here ..

Leave a comment

Post Comment





<

செய்திமடல்

ராசிப்பலன்கள்

கருத்துகணிப்பு