20,May 2024 (Mon)
  
CH
இலங்கை செய்தி

கொழும்பிலிருந்து யாழ்ப்பாணம் வந்த சொகுசு பேருந்து கவிழ்ந்து- பலபேர் காயம்

வவுனியா ஓமந்தையில் இன்று காலையில் இடம்பெற்ற விபத்தில் 18 பேர் காயமடைந்துள்ளனர் என காவல்துறையினர் தெரிவித்தனர்.

கொழும்பில் இருந்து யாழ்ப்பாணம் நோக்கி சென்ற பிரின்ஸ் சொகுசு பேருந்தே 3.30 மணியளவில் கட்டுப்பாட்டை இழந்து ஓமந்தை பகுதியில் இருந்த பாலத்திற்குள் வீழ்ந்துள்ளது.

எதிரில் வந்த பாரஊர்தியுடன் விபத்தை தடுப்பதற்கு முற்பட்டபோதே இவ் விபத்து ஏற்பட்டதாக பேரூந்தின் நடத்துனர் தெரிவித்தார்.

இவ் விபத்தில் காயமடைந்தவர்கள் வவுனியா பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

மேலதிக விசாரணைகளை ஓமந்தை காவல்துறையினர் மேற்கொண்டு வருகின்றனர்.





கொழும்பிலிருந்து யாழ்ப்பாணம் வந்த சொகுசு பேருந்து கவிழ்ந்து- பலபேர் காயம்

0 Comments

    No Comments Here ..

Leave a comment

Post Comment





<

செய்திமடல்

ராசிப்பலன்கள்

கருத்துகணிப்பு