27,Apr 2024 (Sat)
  
CH
உலக செய்தி

ஆளும்கட்சியான கம்யூனிஸ்ட் அதிகாரிகள் மீது, வொஷிங்டன், விசா கட்டுப்பாடுகளை விதித்து வருவதாக அமெரிக்க வெளியுறவுத்துறை செயலர் தெரிவித்துள்ளார்

ஹொங்கொங்கில் சுதந்திரங்களை குறைமதிப்பிற்கு உட்படுத்தும் பொறுப்பு இருப்பதாக நம்பப்படும் தற்போதைய சீன கம்யூனிஸ்ட் கட்சி அதிகாரிகள் மற்றும் முன்னாள் அதிகாரிகளை இலக்காக கொண்டு இந்த தடை விதிக்கப்படுவதாக பொம்பியோ கூறியுள்ளார்.

ஹொங்கொங்கின் சுயாட்சியை அழிக்கக்கூடிய உத்தேச பாதுகாப்புச் சட்டம் தொடர்பாக, பெய்ஜிங்கைத் தண்டிப்பதாக ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் அளித்த வாக்குறுதியைத் தொடர்ந்து, இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அவர் விளக்கம் அளித்துள்ளார்.

சீனா- பிரித்தானியா கூட்டு பிரகடனத்தில் ஹொங்கொங்கின் இறையாண்மை பாதுகாக்கப்படும் என்று உறுதியளித்த சீனா, தற்போது மனித உரிமை மீறலில் ஈடுபட்டு வருவதாக அவர் குற்றம் சாட்டினார்.

சீனாவின் நாடாளுமன்றக் கூட்டத்திற்கு சில நாட்களுக்கு முன்னர் இந்த அறிவிப்பு வெளியாகியுள்ள நிலையில், அமெரிக்காவின் முடிவு திரும்பப் பெறப்பட வேண்டிய ‘தவறு’ என்று சீனா பதிலளித்துள்ளது.

ஞாயிற்றுக்கிழமை தொடங்கும் கூட்டத்தில் தேசிய மக்கள் காங்கிரஸின் நிலைக்குழு புதிய சட்டம் குறித்து விவாதிக்கும்.

புதிய சட்டத்தில், பிரிவினைவாதம் மற்றும் தேசவிரோதச் செயல்களைத் தடுப்பதற்கான கூடுதல் சட்ட அதிகாரங்கள் பரிந்துரைக்கப்பட்டுள்ளன.






ஆளும்கட்சியான கம்யூனிஸ்ட் அதிகாரிகள் மீது, வொஷிங்டன், விசா கட்டுப்பாடுகளை விதித்து வருவதாக அமெரிக்க வெளியுறவுத்துறை செயலர் தெரிவித்துள்ளார்

0 Comments

    No Comments Here ..

Leave a comment

Post Comment





<

செய்திமடல்

ராசிப்பலன்கள்

கருத்துகணிப்பு