03,May 2024 (Fri)
  
CH
இலங்கை செய்தி

பாம்பு கடித்ததில் சிறுவன் பலி

திருகோணமலை - கிண்ணியாவில் 13 வயது சிறுவன் பாம்பு கடித்ததினால் விஷம் ஏறி மூச்சுத் திணறல் ஏற்பட்ட காரணத்தினால் மரணித்துள்ளதாக திருகோணமலை பொது வைத்தியசாலையின் சட்ட வைத்திய நிபுணர் மலிந்த டி சில்வா தெரிவித்துள்ளார்.

உயிரிழந்த சிறுவனின் பிரேத பரிசோதனை திங்கட்கிழமை(1) முடிவடைந்த பின்னர் அவர் இதனை தெரிவித்துள்ளார்.

கிண்ணியா- நடுவூற்று கிராம உத்தியோகத்தர் பிரிவு குட்டியாகுளம் பகுதியைச் சேர்ந்த அஜீஸ் அஜ்மி ஞாயிற்றுக்கிழமை (30) ஆம் திகதி திங்கட்கிழமை வைத்தியசாலைக்கு கொண்டு செல்லும் போது உயிரிழந்தார்.

கிண்ணியா வைத்தியசாலை உத்தியோகத்தர்கள் தமது மகனை சிறந்த முறையில் கவனிக்காமலேயே இச்சம்பவம் இடம்பெற்றதாக உறவினர்கள் குற்றம் சுமத்தியிருந்தனர்.

இந்நிலையில் சிறுவனின் சடலத்தை கிண்ணியா தள வைத்தியசாலையில் இருந்து பிரேத பரிசோதனைக்காக திருகோணமலை பொது வைத்தியசாலைக்கு அனுப்பி வைக்கப்பட்டது.

இந்நிலையில் குறித்த சிறுவனின் உடற்பாகங்கள் பறிக்கப்பட்ட நிலையில் வலது காலில் தொடைப்பகுதியில் பாம்பு கடித்து உள்ளதாகவும் இதேவேளை மூச்சுத்திணறல் ஏற்பட்ட நிலையில் அவர் உயிரிழந்துள்ளதாகவும் அவர் மேலும் குறிப்பிட்டார்.

அத்துடன் தற்பொழுது மழை பெய்து வருவதினால் பாம்புகள் சூடான இடங்களை தேடி வருவதாகவும் வீடுகளில் கீழே தூங்குவதை தவிர்த்துக் கொள்ளுமாறும் திருகோணமலை பொது வைத்தியசாலை சட்ட வைத்திய நிபுணர் மலிந்த டி சில்வா இதன்போது தெரிவித்துள்ளார்.




பாம்பு கடித்ததில் சிறுவன் பலி

0 Comments

    No Comments Here ..

Leave a comment

Post Comment





<

செய்திமடல்

ராசிப்பலன்கள்

கருத்துகணிப்பு