21,Nov 2024 (Thu)
  
CH
இலங்கை செய்தி

பசில் ராஜபக்ஸவிற்கு விதிக்கப்பட்டிருந்த வெளிநாட்டு பயணத்தடை நீக்கப்பட்டுள்ளது

முன்னாள் அமைச்சர் பசில் ராஜபக்ஸவிற்கு கம்பஹா மேல் நீதிமன்றத்தினால் விதிக்கப்பட்டிருந்த வெளிநாட்டு பயணத்தடை நேற்று நீக்கப்பட்டுள்ளது.

கம்பஹா இலக்கம் 1 மேல் நீதிமன்ற நீதிபதி நிமல் ரணவீரவினால் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

தொம்பே - மல்வானை பகுதியில் காணி ஒன்றை கொள்வனவு செய்து சொகுசு வீடொன்று மற்றும் நீச்சல் தடாகம் என்பவற்றை நிர்மாணித்ததன் மூலம் அரச நிதியை முறையற்ற வகையில் பயன்படுத்தியுள்ளதாக முன்னாள் அமைச்சர் பெசில் ராஜபக்ஸ மற்றும் திருகுமார் நடேஷன் ஆகியோருக்கு எதிராக குற்றச்சாட்டு சுமத்தப்பட்டிருந்தது.

இதனையடுத்து அவர்களுக்கு எதிராக சட்டமா அதிபரால் கம்பஹா மேல் நீதிமன்றத்தில் குற்றப்பத்திரம் தாக்கல் செய்யப்பட்டிருந்தது.

தங்களது கட்சிகாரர்கள் கடமைகளுக்காக வெளிநாடு செல்ல வேண்டியுள்ளதால் அந்த வெளிநாட்டு பயணத்தடையை நீக்குமாறு இதன்போது ஜனாதிபதி சட்டத்தரணி, டி.வீரரத்ன, மனுவொன்றின் ஊடாக மன்றில் கோரியிருந்தார்.

இந்த மனுவினை ஆராய்ந்த கம்பஹா மேல் நீதிமன்ற நீதிபதி நிமல் ரணவீர, முன்னாள் அமைச்சர் பசில் ராஜபக்ஸவின் வெளிநாட்டு பயணத் தடையை நீக்கியதுடன் அது தொடர்பில் குடிவரவு மற்றும் குடியகல்வு கட்டப்பாட்டாளருக்கு அறிவிக்குமாறு பதிவாளருக்கு உத்தரவிட்டுள்ளார்.




பசில் ராஜபக்ஸவிற்கு விதிக்கப்பட்டிருந்த வெளிநாட்டு பயணத்தடை நீக்கப்பட்டுள்ளது

0 Comments

    No Comments Here ..

Leave a comment

Post Comment





<

செய்திமடல்

ராசிப்பலன்கள்

கருத்துகணிப்பு