2021 ஆம் ஆண்டு பெப்ரவரி மாத இறுதிப் பகுதிக்குள் 100 மில்லியன் பேருக்கு கொவிட்-19 தடுப்பூசி செலுத்த எதிர்பார்த்துள்ளதாக அமெரிக்கா நம்பிக்கை வெளியிட்டுள்ளது.
இது அமெரிக்காவின் வயது முதிர்ந்தோர் சனத்தொகையில் 40 சதவீதமாகும் என அரசாங்கத்தின் உயர் அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.
பைஸர், பையோன்டெக் மற்றும் மெடேனா என்.எச்.ஐ ஆகியவற்றின் தடுப்பூசிகளுக்கு அங்கீகாரம் வழங்கப்படும்போது இந்த நடவடிக்கை ஆரம்பிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
20 மில்லியன் பேருக்கு டிசம்பர் மாதத்திலும், 30 மில்லியன் பேருக்கு ஜனவரியிலும், 50 மில்லியன் பேருக்கு பெப்ரவரியிலும், தடுப்பூசியை செலுத்த எதிர்ப்பார்க்கப்படுகிறது.
இதேவேளை அங்கு கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 14,313,941 ஆக அதிகரித்துள்ளது
0 Comments
No Comments Here ..