புரவி புயல் தாக்கத்தினால் ஏற்பட்ட கடும் மழை மற்றும் காற்றினால் யாழ்ப்பாண மாவட்டத்தில் 30ஆயிரம் பேருக்கு மேல் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இதன்படி, யாழ். மாவட்டத்தில் தற்போதுவரை ஒன்பதாயிரத்து 346 குடும்பங்களைச் சேர்ந்த 31 ஆயிரத்து 703 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக யாழ். மாவட்ட அனர்த்த முகாமைத்துப் பிரிவின் உதவிப் பணிப்பாளர் என்.சூரியராஜா தெரிவித்துள்ளார்.
அத்தோடு, யாழ். மாவட்டத்தில் தற்போது 32 இடைத்தங்கல் முகாம்கள் அமைக்கப்பட்டு 879 குடும்பங்களைச் சேர்ந்த மூவாயிரத்து 189 பேர் தங்கவைக்கப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
மேலும், கடும் காற்றினால் 48 வீடுகள் முழுமையாகவும், ஆயிரத்து 826 வீடுகள் பகுதியளவிலும் சேதமடைந்துள்ளனர்.
குறிப்பாக, யாழ். மாவட்டத்தில் பருத்தித்துறை, சண்டிலிப்பாய் மற்றும் நல்லூர் பிரதேச செயலாளர் பிரிவில் உள்ளவர்களே அதிகமாகப் பாதிக்கப்பட்டுள்ளதாக சூரியராஜா தெரிவித்துள்ளார்.
0 Comments
No Comments Here ..