அமெரிக்காவின் துணை ஜனதிபதியாக தேர்ந்தெடுக்கப்பட்ட கமலா ஹாரிஸ் தனது நீண்டகால ஆலோசகரான இலங்கை தமிழ் பின்னணியுடையவரான ரோஹினி கொசோக்லுவை தனது உள்நாட்டு கொள்கை ஆலோசகராக நியமித்துள்ளார்.
இது குறித்து கமலா ஹாரிஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில்- எனது உள்நாட்டு கொள்கை ஆலோசகராக பணியாற்றுவது ரோஹினி கொசோக்லு ஆவார். அவர் அமெரிக்க மக்கள் எதிர்கொள்ளும் மிக முக்கியமான சில பிரச்சினைகள் குறித்த நிபுணர் மட்டுமல்ல, எனது நெருங்கிய மற்றும் நம்பகமான ஒருவராகவும் உள்ளார்.
கமலா ஹாரிஸ் செனட் மற்றும் ஜனாதிபதி தேர்தலில் போட்டியிட்ட போது, அவரது பிரச்சாரத் திட்டத்தை வழிநடத்தியவர்களில் ரோகிணியும் ஒருவர்.யாழ்ப்பாணம் மானிப்பாயை சேர்ந்த வைத்தியர் விஜயதேவேந்திரம் ரவீந்திரன் மற்றும் ஷோபனா ரவீந்திரன் தம்பதிகளின் மகள் ரோகிணி. 2017 முதல் ஹாரிஸின் மூத்த ஆலோசகராக பணியாற்றினார். அவர் முன்னர் செனட் அலுவலகத்தில் ஹாரிஸின் தலைமை ஊழியராக பணியாற்றினார்.
ஜனாதிபதி தேர்தலின் போது பிடென்-ஹாரிஸ் பிரச்சாரத்தில் ஹாரிஸின் மூத்த ஆலோசகராக ரோகிணி பணியாற்றினார்.
தேர்தல் பிரச்சாரத்தில் ஒரு மூத்த ஆலோசகராக, அவர்களது அரசியல் நிறுவனத்தில் சக முன்னூறு ஊழியர்களைக் கொண்ட ஒரு குழுவிற்கான விவாதம் தயாரித்தல், கொள்கை, தகவல் தொடர்பு மற்றும் செயல்பாடுகளை 40 மில்லியன் டொலர் பட்ஜெட்டில் நிர்வகித்து மேற்பார்வையிட்டார்.
யாழ்ப்பாணம் மானிப்பாயை சேர்ந்த வைத்தியர் விஜயதேவேந்திரம் ரவீந்திரன் மற்றும் ஷோபனா ரவீந்திரன் தம்பதிகளின் மகள் ரோகிணி. 2017 முதல் ஹாரிஸின் மூத்த ஆலோசகராக பணியாற்றினார். அவர் முன்னர் செனட் அலுவலகத்தில் ஹாரிஸின் தலைமை ஊழியராக பணியாற்றினார்.
ஜனாதிபதி தேர்தலின் போது பிடென்-ஹாரிஸ் பிரச்சாரத்தில் ஹாரிஸின் மூத்த ஆலோசகராக ரோகிணி பணியாற்றினார்.
தேர்தல் பிரச்சாரத்தில் ஒரு மூத்த ஆலோசகராக, அவர்களது அரசியல் நிறுவனத்தில் சக முன்னூறு ஊழியர்களைக் கொண்ட ஒரு குழுவிற்கான விவாதம் தயாரித்தல், கொள்கை, தகவல் தொடர்பு மற்றும் செயல்பாடுகளை 40 மில்லியன் டொலர் பட்ஜெட்டில் நிர்வகித்து மேற்பார்வையிட்டார்.
அமெரிக்க செனட்டில் தலைமைப் பணியாளராக பணியாற்றிய முதல் தெற்காசிய அமெரிக்க பெண் இவராவார்.
ரோகிணி மிச்சிகன் பல்கலைக்கழகம் மற்றும் ஜோர்ஜ் வோஷிங்டன் பல்கலைக்கழகத்தில் பட்டம் பெற்றவர். அவருக்கு மூன்று குழந்தைகள் உள்ளன.
0 Comments
No Comments Here ..