புரெவி சூறாவளி இலங்கையில் இருந்து தூரமாக சென்று வலுவிழந்து தற்போது தாழமுக்கமாக மாறியுள்ளதாக வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
அது தற்போது மன்னார் வளைகுடாவில் இருந்து மேற்கு திசையில் சுமார் 145 கிலோமீற்றர் தொலைவில் இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அசாதாரண காலநிலையால், யாழ்ப்பாண மாவட்டத்தில் தற்போதுவரை 15 ஆயிரத்து 459 குடும்பங்களை சேர்ந்த 51 ஆயிரத்து 602 நபர்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக யாழ்ப்பாண மாவட்ட அனர்த்த முகாமைத்துவ நிலையத்தின் உதவி பணிப்பாளர் ரீ.என்.சூரியராஜா தெரிவித்துள்ளார்.
0 Comments
No Comments Here ..