02,Jan 2026 (Fri)
  
CH
இலங்கை செய்தி

பாரதியாரின் 138 ஆவது பிறந்ததின நினைவேந்தல்

யாழ் இந்திய உதவித்துணைத்தூதரகத்தின் ஏற்பாட்டில் மஹாகவி சுப்பிரமணிய பாரதியாரின் 138 ஆவது பிறந்ததின நினைவேந்தல் நிகழ்வு இன்று யாழ் அரசடி வீதியில் அமைந்துள்ள அமரரின் நினைவுதூவியில் நடைபெற்றது.

இவ் நினைவேந்தலினை செலுத்துவதற்காக பிரதம அதிதியாக யாழ் இந்திய உதவித்தூதுவர் சங்கர் பாலச்சந்திரன் கலந்துகொண்டு மலர்மாலை அணிவித்ததுடன் அஞ்சலியும் செலுத்தினார்.

இந்த நிகழ்வில் வடமாகாண சபையின் முன்னாள் அவைத்தலைவர் சி.வீ.கே.சிவஞானம், யாழ் மாநகர முதல்வர் இமானுவேல் ஆனோல்ட், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்களாகிய சோ.மாவைசேனாதிராஜா, எம்.கே.சிவாஜிலிங்கம், மற்றும் வடமாகாண சபையின் முன்னாள் உறுப்பினர்களாகிய அனந்தி சசிதரன், கஜதீபன் மற்றும் யாழ் தமிழ்ச்சங்கத்தின் உறுப்பினர்களும் முன்னாள் பேராசியார்களும் கலந்துகொண்டு நினைவேந்தலுக்கான மலர் அஞ்சலி செலுத்தினர்.

இங்கு எட்டையபுரத்தின் மஹாகவியின் காவிய கலைஞன் என்னும் தொணிப்பொருளில் சிறப்பு உரையும் வாழ்நாள் பேராசியர்கள் நிகழ்ந்தினர்.




பாரதியாரின் 138 ஆவது பிறந்ததின நினைவேந்தல்

0 Comments

    No Comments Here ..

Leave a comment

Post Comment





<

செய்திமடல்

ராசிப்பலன்கள்

கருத்துகணிப்பு