கடந்த 24 மணிநேரத்தில் வெளிநாடுகளில் சிக்கித் தவித்த மேலும் 884 பயணிகள் நாடு திரும்பியுள்ளனர்.
பெரும்பாலும் மத்திய கிழக்கு நாடுகளில் தொழில்நிமித்தம் வெளிநாடு சென்றிருந்த இலங்கையர்கள் இவ்வாறு நாடுதிரும்பியுள்ளதாக தெரியவந்துள்ளது.
இதன்படி தொழில் நிமித்தம் வெளிநாடு சென்றிருந்த நிலையில் நிர்க்கதிக்குள்ளான இலங்கையர்கள் 570 பேர் விசேட விமானங்களில் நாடுதிரும்பியுள்ளனர்.
இதேவேளை நாடு திரும்பியுள்ள அனைவரும் விமான நிலையத்தில் பி.சி.ஆர். பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டு சுற்றுலா ஹோட்டல்களில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.













0 Comments
No Comments Here ..