இலங்கையில் மேலும் கொரோனா தொற்று அடையாளம் காணப்பட்டுள்ளது. இவ்வாறு தொற்று கண்டறியப்பட்டவர்களில் 352 பேர் ஏற்கனவே தொற்று கண்டறியப்பட்டவர்களுடன் தொடர்புடையவர்கள் எனவும் ஏனைய 68 பேர் சிறைச்சாலைக் கொத்தணியைச் சேர்ந்தவர்கள் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், இலங்கையில் கொரோனா தொற்று கண்டறியப்பட்டோரின் மொத்த எண்ணிக்கை 33 ஆயிரத்து 898 ஆக அதிகரித்துள்ளது.
இதேவேளை, கொரோனா தொற்றிலிருந்து குணமடைந்து இன்று 558 பேர் வீடுகளுக்குத் திரும்பியுள்ள நிலையில் இதுவரை 24 ஆயிரத்து 867பேர் தொற்றிலிருந்து மீண்டுள்ளனர்.
இந்நிலையில், இன்னும் எட்டாயிரத்து 877 பேர் தொடர்ந்தும் வைத்தியசாலைகளில் சிகிச்சைபெற்று வருகின்றனர்.
இதேவேளை, இலங்கையில், கொரோனா தொற்றினால் இதுவரை 154 பேர் மரணித்துள்ளமை குறிப்பிடத்தக்கது













0 Comments
No Comments Here ..