27,Apr 2024 (Sat)
  
CH
உலக செய்தி

பல இளம்பெண்களை படுகொலை செய்த ட்விட்டர் கில்லருக்கு மரண தண்டனை!

ஜப்பானில் பல பெண்களை படுகொலைச் செய்த 27 வயதான ட்விட்டர் கில்லருக்கு டோக்கியோ நீதிமன்றம் மரண தண்டனை விதித்துள்ளது.

நொவம்பர் 2017ல் 9 இளம்பெண்களை படுகொலைகளைச் செய்த ‘ட்விட்டர் கில்லர்’ என்று அழைக்கப்படும் Takahiro Shiraishi-க்கு மரண தண்டனை விதிக்கப்பட்டதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

தங்களுடைய தற்கொலை எண்ணங்களைப் பற்றிய தகவல்களை ஒன்லைனில் பதிவிட்ட இளம்பெண்களுடன், Takahiro Shiraishi ட்விட்டர் மூலம் தொடர்புக்கொண்டு பழகியுள்ளான்.

தற்கொலை திட்டங்களுக்கு உதவுவதாகவும் அல்லது சேர்ந்து இறக்கலாம் என்று கூறி நெருக்கமாக பழகிய பின்னர் Takahiro Shiraishi அவர்களைக் கொன்றுள்ளான்

மொத்தத்தில், Shiraishi 15 முதல் 26 வயதுடைய 9 இளம் பெண்களை கொன்றுள்ளான்.

தற்கொலை செய்து கொள்வதாக மிரட்டல் விடுத்த 23 வயது சிறுமி மர்மமாக காணாமல் போன வழக்கின் விசாரணையின் போது ஜப்பானிய அதிகாரிகள் Takahiro Shiraishi-யின் அடையாளத்தை கண்டுபிடித்துள்ளனர்.

ஒரு மாதத்திற்கு முன்னர் காணாமல் போன இளம் பெண்களின் உடல் எச்சங்கள் ஜப்பானிய தலைநகரின் புறநகரில் உள்ள Shiraishi-ன் குடியிருப்பில் கண்டெடுக்கப்பட்டன.

ஜப்பானிய அதிகாரிகள் ஏற்கனவே சமூக வலைதளங்களில் தற்கொலை பற்றிய பதிவுகளுக்கு எதிரான பிரச்சாரத்தை அறிவித்துள்ளனர். பின்னர் ஜப்பானிய அதிகாரிகளுடன் ட்விட்டர் நிர்வாகம் இணைந்துள்ளது.

இப்போது இணையத்தில் தற்கொலை பதிவை பதிவிடும் ஒவ்வொரு நபருக்கும் ஆதரவு கிடைக்கும் என அதிகாரிகள் உறுதிப்படுத்தியுள்ளனர்.




பல இளம்பெண்களை படுகொலை செய்த ட்விட்டர் கில்லருக்கு மரண தண்டனை!

0 Comments

    No Comments Here ..

Leave a comment

Post Comment





<

செய்திமடல்

ராசிப்பலன்கள்

கருத்துகணிப்பு