20,May 2024 (Mon)
  
CH
சினிமா

நடிகை சிம்ரனின் புகைப்படத்தை பார்த்து ஷாக்கான ரசிகர்கள்

90ஸ் காலகட்டத்தில் தமிழ் திரையுலகில் முன்னணி கதாநாயகியாக கொடிகட்டி பறந்தவர் நடிகை சிம்ரன். இதுமட்டுமின்றி இளைஞர்கள் மத்தியில் கனவு கன்னியாகவும் கொண்டாடப்பட்டார்.

ஆனால் ஒரு காலகட்டத்திற்கு பிறகு திரையுலகில் தனது வாய்ப்புகளை இழந்து, திருமணம் செய்து கொண்டு இரு பிள்ளைகளுக்கு தாயாகி, திரையுலகில் இருந்து விலகி இருந்தார்.

மேலும் தற்போது தமிழ் சினிமாவில் தனது இரண்டாம் பயணத்தை துவங்கியுள்ள நடிகை சிம்ரன், பேட்ட படத்தில் நடித்திருந்தார். அதுமட்டுமின்றி தற்போது அந்தாதுன் படத்தின் தமிழ் ரீமேக்கில் பிரஷாந்துடன் இணைந்து நடிக்க இருக்கிறார்.

சமூக வலைத்தளங்களில் மிகவும் ஆக்டிவாக இருந்து வரும் நடிகை சிம்ரன் தனது லேட்டஸ்ட் புகைப்படம் ஒன்று தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.

இந்த புகைப்படத்தை பார்த்து ஷாக்கான ரசிகர்கள் " எப்படி இருந்த சிம்ரன் இப்படி ஆகிட்டிங்களே " என்றும் " உங்களுக்கு வயசு ஆகிடுச்சு சிம்ரன் " என்று கமெண்ட் செய்து வருகின்றனர்.




நடிகை சிம்ரனின் புகைப்படத்தை பார்த்து ஷாக்கான ரசிகர்கள்

0 Comments

    No Comments Here ..

Leave a comment

Post Comment





<

செய்திமடல்

ராசிப்பலன்கள்

கருத்துகணிப்பு