01,Nov 2026 (Sun)
  
CH
இலங்கை செய்தி

சவுதி அரேபியாவில் இருந்து நான்காயிரத்திற்கும் மேற்பட்டோர் நாடு திரும்ப இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது

சவூதி அரேபியாவில் பணிபுரியும் 4 ஆயிரத்துக்கும் மேற்பட்ட இலங்கையர்கள் நாட்டுக்குத் திரும்பத் தயராகவுள்ளதாக றியாத்தில் உள்ள இலங்கைத் தூதரகம் தெரிவித்துள்ளது.

வெளிநாடுகளில் நிர்க்கதியாகியுள்ள இலங்கையர்களை நாட்டுக்கு அழைத்து வரும் நடவடிக்கையை இலங்கை ஆரம்பித்துள்ள நிலையில், சவூதி அரேபியாவுக்கான இலங்கைத் தூதரகம் இந்தத் தகவலை வெளியிட்டுள்ளது.

சவூதியிலுள்ள இலங்கையர்களில், பல்வேறு மருத்துவ சிக்கல்களில் உள்ளவர்களுக்கே முதலிடம் அளிக்கப்படவுள்ளது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஒரு இலட்சத்து 35 ஆயிரம் இலங்கையர்கள் பல்வேறு தேவைகளுக்காகவும் தொழில் வாய்ப்புகளுக்காகவும் சவூதி அரேபியாவில் வசித்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.




சவுதி அரேபியாவில் இருந்து நான்காயிரத்திற்கும் மேற்பட்டோர் நாடு திரும்ப இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது

0 Comments

    No Comments Here ..

Leave a comment

Post Comment





<

செய்திமடல்

ராசிப்பலன்கள்

கருத்துகணிப்பு