24,Nov 2024 (Sun)
  
CH
ஆரோக்கியம்

நெல்லிக்காய் சாப்பிடுவதால் கிடைக்கும் 10 சிறந்த நன்மைகள்

பெரிய நெல்லியில் இரும்புச்சத்து மற்றும் வைட்டமின் சி சத்து அதிகளவில் நிறைந்திருக்கிறது. உடல் ரத்தத்தில் ஹீமோக்ளோபின் அளவு குறைவாக இருக்கும்போது பெரிய நெல்லிக்காயை சாப்பிடுவதால் தீர்வு கிடைக்கும். கர்ப்ப காலங்களில் பெரிய நெல்லிக்காயை சாப்பிடுவது நல்லது. இது இரத்தத்தில் ஹீமோக்ளோபின் அளவை அதிகரிக்க உதவும். பெரிய நெல்லிக்காய் சாப்பிடுவதால் என்ன நன்மைகள் கிடைக்கின்றது பார்க்கலாம். 


1. நோய் எதிர்ப்பு சக்தி:

நெல்லிக்காயில் வைட்டமின் சி, ஆண்டிஆக்ஸிடண்ட் அதிகம் இருப்பதால் நோய் எதிர்ப்பு சக்தியை நம் உடலில் அதிகரிக்கிறது. மிகவும் கசப்பாக இருக்கும் ஆதலால், நெல்லிக்காயுடன் வெல்லம், கல் உப்பு சேர்த்து இரண்டு அல்லது மூன்று துண்டுகளை சாப்பிடலாம். 


2. சருமம் மற்றும் கூந்தல்:

நெல்லிக்காய் பொடியை தயிருடன் கலந்து தலையின் ஸ்கால்பில் தடவி வந்தால் கூந்தலின் வளர்ச்சியை அதிகரிப்பதுடன் சருமத்தின் ஆரோக்கியத்தையும் அதிகரிக்கும் பொடுகுத் தொல்லையும் நீங்கும். நெல்லிக்காய் சாப்பிட்டு வந்தாலே சருமமும் கூந்தலும் ஆரோக்கியமாக இருக்கும்.


3. மலச்சிக்கல்:

நெல்லிக்காய் சாப்பிடுவது மலச்சிக்கலை தவிர்க்க உதவுகிறது.


4. வயிறு

நெல்லிக்காய் வயிற்றுப் புண்களை ஆற்றும் தன்மை கொண்டது.


5. நீரிழிவு

நெல்லிக்காய் சாப்பிடுவதால் இன்சுலின் சுரப்பை சீராக வைக்கிறது. இதனால் நீரிழிவு நோய் கட்டுக்குள் இருக்கும்.


6: ஹீமோக்ளோபின்:

நெல்லிக்காய் மற்றும் வெல்லம் இரண்டையும் சேர்த்து சாப்பிடுவதால் உடலுக்கு தேவையான ஹீமோக்ளோபின் கிடைக்கின்றது. இது உடலில் சிவப்பு இரத்த அணுக்களை அதிகரிக்க செய்கின்றது.


7. இளமை

குறைந்தது வாரம் ஒரு நெல்லிக்காய் சாப்பிடுவதால் பளப்பான சருமத்துடன் முகமும் பொலிவுடன் இருக்கும். இது செல்களை புத்துணர்வு பெற வைத்து, ரத்த ஓட்டத்தை தூண்டி விடுவதால் தோலில் சுருக்கங்கங்கள் ஏற்படுவதை தடுத்து இளமையுடன் இருக்க உதவுகின்றது.


8. குளிர்ச்சி

இது உடல் சூட்டைக் குறைத்து, குளிர்ச்சி ஏற்படுத்தும் ஆற்றல் கொண்டது.


9. கல்லீரல்

கல்லீரலில் இருக்கும் கிருமிகளை அழித்து நலம் பயக்கக் கூடியது.


10. எலும்பு

நெல்லிக்காயில் உள்ள கால்சியம் சத்து, எலும்புகளை உறுதியாக்கும்.


Note: அளவிற்கு மிஞ்சினால் அமுதமும் நஞ்சாகும். நெல்லிக்காய் சாப்பிடுவதால் உடலுக்குப் பல்வேறு நன்மைகளை கிடைக்குமென்றாலும், தொடர்ச்சியாக அதை அதிகமாகவோ, அதிக அளவில் சாறாகவோ உட்கொள்ளக் கூடாது. தொடர்ச்சியாக தினமும் நெல்லிச்சாறு அருந்துவதைத் தவிர்ப்பது நல்லது. ஏனெனில் ஒன்றுக்கு மேற்பட்ட நெல்லிக்காய்களை கொண்டே நாம் சாறாக எடுக்கின்றோம். 




நெல்லிக்காய் சாப்பிடுவதால் கிடைக்கும் 10 சிறந்த நன்மைகள்

0 Comments

    No Comments Here ..

Leave a comment

Post Comment





<

செய்திமடல்

ராசிப்பலன்கள்

கருத்துகணிப்பு